பக்கம்:அண்ணா காவியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அண்ணா காவியம்


தில்லியிலே எதற்காக நடுவண் ஆட்சி?
தில்லிக்குத் தலைமையினை அளித்தோர் யாரோ?

எல்லையிதைத் தனியாக இயற்கை யன்னை
இசைவாக அளித்திருக்க, எந்த நாளும்

தொல்லையினைத் தருகின்ற வடவ ரோடு
தொடர்ந்து வாழ நியாயமென்ன? இங்கே வந்தும்

நல்லவற்றைச் சுரண்டுதற்கே வருகின் றார்கள்;
நமக்கிருக்கும் உரிமையெலாம் பறிக்கின் றார்கள்!



விடுதலையும் 'குடியரசு'ம் அண்ணா தீட்டும்
வீரவரிக் காவியங்கள் பாடுமாறும்,

கெடுதலெலாம் கண்டித்துத் துடைக்கு மாறும்,
கீழ்ப்பட்ட தென்னாட்டார் உணரு மாறும்,

படுதுயரை நீக்குதற்கே வழிவ கைகள்
பாங்குடனே காட்டுமாறும், பெரியார் அன்றே

விடுகணையாய் அண்ணனுக்கு வாய்ப்புத் தந்தார்: :வீரமிகும் ஈரோடு சேர்ந்தார் அண்ணா! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/62&oldid=1078985" இலிருந்து மீள்விக்கப்பட்டது