பக்கம்:அண்ணா காவியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மாணாக்கர் இலம்பகம்
67


விடுமுறையை விணாகக் கழிக்கா வண்ணம்
விரைந்திட்டார் மாணவர்கள் ஈரோட்டுக்கே!

கடுமுயற்சி மேற்கொண்டே-உணவும், தங்கக்
கனிவாக உறையுளுமே அளித்தார் தந்தை;

இடும் உரையை ஏந்துதற்கும், அண்ணா தந்த
ஈடற்ற சொற்பொழிவைச் செவிம டுத்துக்,

கெடுமுறையைப் புரிந்துகொண்டு திராவி டர்கள்
கீழ்நிலையை மாற்றுதற்கும் துணிவு கொண்டார்!




நெடுஞ்செழியன்-பெயர்க்கேற்ற உயர்ந்த தோற்றம்: :நீண்டதொரு கருந்தாடி, நெடிய சட்டை!

கடுமையுடன் அன்பழகன் பேச்சி ருக்கும்:
காற்றடித்தால் பறக்கின்ற மெலிந்த மேனி!

கொடுமைதான்-மதியழகன் உருவம் குள்ளம்:
கோடையிடி போற்குமுறும் குரலோ ஓங்கும்:

தொடுமுன்னர் ஒட்டுகின்ற கரிய தேகம்:
துணிச்சலுள்ள இளம்வழுதி! இவர்க ளோடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/69&oldid=1079003" இலிருந்து மீள்விக்கப்பட்டது