பக்கம்:அண்ணா காவியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அண்ணா காவியம்


தமிழகத்து மாவட்டத் தோறும் இந்தத்
தகைமைசால் மாணவர்கள் சுற்றிச் சுற்றி

அமிழ்தான தாய்மொழியில் பெரியார் கொள்கை :அருமையான குரலெடுத்துப் பேசிப் பேசிச்

சமுதாயம் சீர்கெட்ட வகையும் கூறிச்
சலியாது பிரசாரம் புரிய லானார்!

அமைவாக, ஆங்காங்கே உள்ள தோழர்
ஆதரிக்கப் பயணங்கள் நடத்தி வந்தார்!




ஒருதிங்கள் கல்லூரி ஓய்வுக் காலம்
உபயோகப் படுமாறு செலவழித்துப்

பெருமளவில் கொள்கையெல்லாம் பரப்பி வந்தார்! :பெரியாரும் அண்ணாவும் மகிழ்வாய் இந்தக்

கருவிதனை இடைவிடாது பயன்ப டுத்தக்
கருத்தினிலே இருத்தி, மற்ற மாண வர்க்கும்

வருகின்ற விடுமுறையில் பயிற்சி நல்க
வகுத்திட்டார் திட்டங்கள் ஊர்கள் தோறும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/72&oldid=1079226" இலிருந்து மீள்விக்கப்பட்டது