பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

125


தஞ்சாவூர்க்காரன் இருக்கேனே—என்னைப் பார்க்கிறதுக்காகண்ணு அண்ணா எப்பவாவது விசேடமா வந்ததுண்டா?” என்றேன். “அட, நீ தஞ்சாவூர்க்காரன்கிற ஞாபகமே வர்றதில்லியே அய்யா! நீ எப்பவாவது இங்கே இருந்திருக்கியா இதுக்கு முன்னே? ஒன்னை தான் ஈரோட்டிலேயே பார்த்துக்கிறேனே"—உடனே அண்ணா என்னை மடக்க, நான் விடவில்லை. மேலும் தொடர்ந்து “சரி என்னெ விடுங்க. நம்ம டி. கே. சீனிவாசன், ஏ. கே. வேலன், கரந்தை சண்முகவடிவேல், இவுங்களோட பொன்மலை பராங்குசம் : எல்லோருமே தஞ்சாவூரிலே இல்லியா—ஆனா இப்ப கே. ஆர். ஆர். கம்பெனியை தஞ்சாவூர்லெ ஆரம்பிக்கச்சொல்லி, அதுக்காகவே நீங்க. அடிக்கடி தஞ்சாவூர் வர்றிங்க. எப்படியோ, நீங்க. வர்றதிலே எங்களுக்கு மகிழ்ச்சிதான் அண்ணா!” என்று முடித்துக்கொண்டேன். கம்பெனி வீடும் வந்து விட்டது. அது மானோஜி அப்பா வீதியில் பெரிய மாடிக் கட்டடம்.

வாயிலிலேயே பெருங் கூட்டம். நமது நடிகத் தோழர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு அண்ணாவை வரவேற்றனர். வாத்தியார் எம். எஸ். முத்துகிருஷ்ணன், நடிகமணி டி. வி. நாராயணசாமி, சிவாஜி கணேசன், பி. எஸ். தட்சணாமூர்த்தி, எஸ். எஸ். சிவகுரியன், வி. எஸ் . நடேசன், ஏ. எம். மருதப்பா, லெட்சுமிபதி. எம். என். கிருஷ்ணன், எஸ். சி. கிருஷ்ணன், டி.என். கருணாகரன், டி. என். கிருஷ்ணன், சிதம்பரம், ஜி. எஸ். மகாலிங்கம், மணி, கடைசியாக Booking clerk இராம. வீரப்பன்...இன்னும் பலர் இருந்தனர்.

“அண்ணா! புதுநாடகம் கொண்டு வந்துட்டீங்கள் அண்ணா!” எல்லாரும் கோரஸ் பாடினர். “அடுத்த வாரம்!” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அண்ணா மாடிக்கு விரைந்தார். வேறென்ன அவசரம்? அப்போது இம்மாதிரி ஓய்வாகச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சீட்டாட்டம்தான் அண்ணாவுக்குப் பொழுதுபோக்கு!