பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

175


போல! ஆனா ஒட்டலை விட இதெல்லாம் நல்லாயிருக்கும். அதிலும், பெருமாள் கோயில் மடைப்பள்ளிகளில் செய்தவை மிகவும் ருசியாயிருக்கும். இதிலெ தோஷமில்லை; சாப்பிடலாம்” என்றார் நகைத்துக்கொண்டே!

என்னுடைய கடுமையான விரதத்தை உடைத்தேன் அன்றையதினம்! அதற்குப் பிறகு, திருப்பதி லட்டு, பழனிப் பஞ்சாமிர்தம் - இவை விலைக்கு வாங்கிவரப்பட்டு என்னிடம் தரப்பட்டால், ரசித்துச் சாப்பிடுவேன். பிரசாதம் என வெறுத்து ஒதுக்கி வந்த என் கொள்கையால், அபூர்வமான ஒரு தின்பண்டத்தை இழக்க இருந்தேன்! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அக்கார அடிசில் என்னும் சர்க்கரைப் பொங்கல் அது! Full திட்டம் என்று பெயராம். அதில் தண்ணிருக்குப் பதில் நெய்யை ஊற்றி அரிசியை வேக வைத்திருப்பார்களோ? அரிசியை விட முந்திரிப் பருப்பும் திராட்சையும் அதிகமோ? அடடா! என்ன ருசி! திகட்டலான ருசி!

அண்ணாவுக்குத் தூள் பக்கோடா தின்பதிலும் விருப்பம் அதிகம். சாதாரணத் தேநீர் விடுதிகளில் தயாரிக்கப்படும் பக்கோடாவை வைத்திருக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியில், வெங்காயம் மிகுதியாய்க் கருகலான தூள் தங்கியிருக்கும். அண்ணாவிடம் இந்த ரகசியம் தெரிந்து கொண்ட பின்னர், சுவை கூடிய இந்தத் துரள் பக்கோடா சாப்பிடுவதை நானும் வழக்கமாக்கிக் கொண்டேன்.

காரில் பயணம் போகும்போது, உளுந்துர் பேட்டையில் முட்டை தோசை போடச் சொல்வி, அண்ணா சாப்பிடுவார்கள். அதையும் அண்ணாவிடமிருந்து புரிந்து கொண்டு சுவைத்துச் சாப்பிட்டேன், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம்!

பதவி ஏற்ற பின்னர் 1968 ஏப்ரலில் ஒரு விடுமுறை நாளில் கோட்டையில் அண்ணா முதலமைச்சர் அறையிலும், கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சர் அறையிலும் அமர்ந்து files பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, கோவிந்தப்ப நாயக்கர்