உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

அண்ணா—சில நினைவுகள்


யாரையும், வீரமணியையும், சம்பந்தத்தையும் அழைததுக் கொண்டு அடையாறு மருத்துவமனைக்கு வேனில் வந்து சேர்ந்தார். அண்ணாவின் சடலம், துங்கம்பாக்கம் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட,வெளியில் ஸ்ட்ரெச்சரில் வந்தபோது, வெறித்து நோக்கிய தந்தை பெரியாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கலைஞர். “அய்யா, நாங்க அநாதைகளாயிட்டோமே அய்யா!” என்று கதறிக் கதறி அழுததும்-

(இனி எழுத என்னாலாகாது)