பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நோயிலுங்கூட நகைச்சுவை மலருமா?

“நாகர்கோயிலுக்குப் புறப்படுகிறேன், அண்ணா!” தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புமிகு தலைவர் சி. பா. ஆதித்தனார்.

“சரி, போய் வாருங்கள். ஆனால் வெளிப்படையாக எதிலும் ஈடுபட வேண்டாம்.” தமிழ்நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

“பார்த்துக் கொள்றேங்க. திரும்ப வந்ததும்...சபா நாயகரா நீடிக்க விடமாட்டீங்கன்னு நெனக்கிறேன்” ஆதித்தனார்.

இதற்கு பதிலில்லை. மந்திரி பதவிக்கான விண்ணப்பத்தை நினைவூட்டுகிறார் என்பது அண்ணாவுக்கு புரியுமே.

இந்த உரையாடல் நடந்தபோது சென்னையிலிருந்தப் நான், மறுநாள் மாயூரம் திரும் பிவிட்டேன்.

1967 புரட்சித் தேர்தலில் பெ. சீனிவாசனிடம் விருது நகரில் தோல்வியுற்ற காமராசரை, மார்ஷல் நேசமணி மறைவால் ஏற்பட்ட நாகர் கோயில் இடைத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடச் செய்தனர். காங்கிரசார் காமராசர் தோல் விக்குப் பழி தீர்க்க மும் முரமாக முனைந்தனர். காமராசருக்குப் போட்டியான டாக்டர் மத்தியாஸ், சுதந்திரக் கட்சி வேட்பாளர், தி. மு. க. ஆதரவுடன். அண்ணாவுக்குக் காமராசரை நாம் எதிர்ப்பதே பிடிக்கவில்லை.

கலைஞரிடமிருந்து ‘டிரங்கால்’ வந்திருப்பதாக மாயூரம் R. S. அஞ்சல் மனையின் தூதுவர் வந்தார்.