பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அண்ணா—சில நினைவுகள்


காலைநேரம். ஒடினேன், சைக்கிளில்தான்! “என்ன சார்? அண்ணா உங்களெ உடனே மெட்ராஸ் வரச்சொன்னாங்க கலைஞரின் குரல். “என்னங்க இது? நேத்துதானே அங்கேருந்து வந்தேன். நாளை மறுநாள் டுட்டியிலே வருவேனே!” - “இல்லெ சார், லீவு போட்டுட்டு உடனே வாங்க!” -அவ்வளவுதான்! தொலைபேசித் தொடர்பு முடிந்தது : புறப்பட்டேன்! வேறு வழி?

24.12.68 அன்று கீழவெண்மணியில் 42ஆதித்திராவிடத் தோழர்களை விட்டோடு கொளுத்திய சோக நிகழ்ச்சி, சீர்கெட்டிருந்த அண்ணாவின் உடலை மேலும் பாதித்து விட்டது! நேரில் சென்று சமாதானப்படுத்தி வருமாறு அமைச்சர்களான கலைஞர், மாதவன் இருவரையும் அண்ணா அனுப்பினார்! அவர்கள் திரும்பச் சென்னை செல்லும்போது மாயூரம் வந்து, என்னையும் அழைத்துப் போனார்கள். அண்ணாவைப் பார்த்த பின்னரே மாயூரம் திரும்பியிருந்தேன்.

“நாகர்கோயிலுக்குப் போய்ட்டு வாய்யா, கருணாநிதி கூட” - இது அண்ணாவின் ஆணை. “இடைத் தேர்தல்லெ போயி நான் என்னண்ணா செய்யப் போறேன்?” நான் நடுக்கத்துடன்! “அட, அதுக்கில் லேய்யா. நீ கருணாநிதி கூடவே பாதுகாப்புக்காக இரு” அவ்வளவுதான்!

கலைஞருடன் நாகர்கோயில் போய் இறங்கியவுடன் நன்கு புலனாகிவிட்டது, அண்ணா ஏன் ஒருவகை அச்சத்துடன் அப்படி என்னிடம் கூறினார்கள் என்பது! பயங்கர வன்முறைகளுக்குச் சித்தமாய் ஆயிரக்கணக்கான காங்கிரசார் அங்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தனர். தி. மு.க. தான் ஆளுங் கட்சியா என்று நாமே கேட்கக் கூடிய அளவுக்கு நமக்கு பலவீனம், பாதுகாப்பற்ற சூழல், எங்கும்!