பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழும்பாத மதிற்சுவர்!

1956-ல் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக இரண்டாவது மாநில மாநாடு பல வகையிலும் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். தி.மு.க. தேர்தலில் நிற்கும் முடிவு அங்குதானே மேற்கொள்ளப் பட்டது. அதனால் மட்டுமல்ல. பந்தலை இரு பகுதிகளாகப் பிரித்து, ஒரு பகுதியில் பகல் நிகழ்ச்சிகள்; மேடையின் மறுபுறம் இரவில் நாடகங்கள். இவ்வளவு வசதியான பெரிய இடம் வேறெங்கும் கிடைத்ததில்லை.

திருவாவடுதுறை நாதசுரச் சக்கரவர்த்தி டி. என். ராஜரத்தினம் அவர்களின் நாயன இசையும், சிதம்பரம் இசைச்சித்தர் சி. எஸ். ஜெயராமன் அவர்களின் தமிழிசை யும் வேறெங்கும் நமது மாநாட்டில் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. கலைவாணரின் வில்லிசையும் இங்கு இருந்தது. ஆனால் அவர் நம்முடைய வேறு சில மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். நான்கு நாட்களும் பெரு விழாக்களே.

ஈ. வெ. கி. சம்பத் திராவிட முன்னேற்றக் கழத்தி விருந்து விலகப் போவதாக (அப்போதே) ஒரு வதந்தி பரவியிருந்தது. அத்தருணத்தில், அவரது அத்யந்த நண்பரான கவிஞர் கண்ணதாசன், திருச்சிக்கு வலிய வந்து, அண்ணாவிடம், தன்னைக் கழகத்துக்கு அழைத்து வந்த கலைஞரைப் பற்றி ஏதோ கோள் மூட்டிவிட்டு, உடனே காரைக்குடி போய்விட்டார். அதை நம்பியதாலோ என்னவோ, அண்ணா சில நாட்கள் திருச்சியில் கலைஞரிடம் பேசாமல் இருந்து வந்தார். ஆனால் இது வேறு அ-6