உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லுமிடமெங்கும் இளைஞர் அணியின் சின் னப் புது மலர்களை- சிங்கார அகல் விளக்குகளை- ஏராளமாகக் கண்டிட முடிகிறது! எதிர்காலத் தமிழகத்தின் நலம்பாடக் கூடிய- அந்த நிகழ்காலப் பிறை நிலவுகளை வளர விடுவோம்! முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் முழு நில வாகத் தமிழகம் தோன்றிட; என் சின்னத் தம்பி களே! செல்லக் கட்டிகளே! சிரிப்பு தவழும் முகத் துடனே செயல் புரிய வாரீர்! எங்கே பார்க்கலாம்; இளைஞர் அணி இல்லாத இடங்களே இருக்கக் கூடாது! தொடர்ந்திடுக பணியை! தொடர்பு கொள்க கழக அமைப்புகளுடன்! அதில் ஏதேனும் தொல்லை யிருப்பின் தலைமைக் கழகத்திற்கு தகவல் தருக! [9.8.81. முரசொலி ஏட்டில் கலைஞரின் மடல்] அன்புள்ள, மு.க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/22&oldid=1694809" இலிருந்து மீள்விக்கப்பட்டது