உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


கட்டுப்பாடு மிக்க இளங்காளையர் கழகத்தின விழுது களாக இளைஞர் அணிகளை அமைத்து வருகின்றனர்! கழகத்தில் மூத்தோராயிருப்போர் இளைஞர்களை, அந்த இன்னும் ஊக்கப்படுத்துவார்களே யானால்- கடல்மடை திறந்தாற்போல் அந்தச் சிறுத்தைக் கூட்டம் செயலாற்றப் புறப்படும்! ஒரிரு இடங்களில் இளைஞர் அணியினரைச் செய லிழக்கச் செய்யும் காரியங்களும் நடைபெறுவதாகத் தகவல்! மிகச் சில இடங்கள்தான் எனினும், அதற் காக வருந்துகிறேன்! திருந்திக் கொள்ள வேண்டு கிறேன்! இளைஞர் அணி- ஆலுக்கு விழுதே தவிர வாழைக்குக் கன்றல்ல- என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது! பெரியோரின் அனுபவம்- இளையோரின் ஆர் வம்- இரண்டும் ஒருஇயக்கம் வளர- வலிவுபெற தேவைதானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/21&oldid=1718266" இலிருந்து மீள்விக்கப்பட்டது