இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
பட்டாளம்; ஆம்- அரும்புமீசைத் தம்பிகள்; இல்லை
அந்த மீசை கூட அரும்பிடாதவர்கள்- இயக்கத்தின்
சுடர் மணிகளாய்- கதிர் ஒளிகளாய்- வந்து
குவிந்த வண்ணமிருப்பதைப் பார்த்துப் பூரிக்கிறோம்!
-
தாய்மொழி காக்க- தமிழ் நில மேன்மை
காக்க- தமிழின மானம் மரியாதை காக்க- பகுத்
தறிவு நெறி காக்க - பாட்டாளி வர்க்கத்தின் உரிமை
காக்க - இடையறாது பணியாற்றும் இந்தக் கழகப்
பாடிவீட்டில் இளைஞர் அணியினர் பெருகிட வேண்
டும்; என்ற கருத்தினைக் கழகம் அறிவித்தவுடனே-
இலட்சக்கணக்கில் இளைஞர்கள் இணைந்த வண்ண
முள்ளனர்!
எங்கெங்கு நோக்கினும் இளைஞர் அணியடா!
எனப் பொங்கிடும் உவகையால் பாடிடத் தோன்று
கிறது!
உயர்வுகள் போற்றிடவும்-
ஒழுக்கம் பேணிடவும்-
கடமைகள் ஆற்றிடவும்—
கண்ணியம் நாட்டிடவும்-