உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


கண்விழித்து ஒட்டுவதிலும்- தெருவெல்லாம் கொடி களைத் தோரணங்களைப் பதாகைகளைத் தொங்க விடு வதற்காக அல்லும்பகலும் அயராது பாடுபடுவதிலும் எவ்வளவு அக்கறை-உறுப்பினர் சேர்ப்பதில் எவ்வளவு உற்சாகம் - அடடா! அந்த இளமையின் துள்ளல் முழுவதும் இந்த இயக்கத்திற்காக - இலட்சிய வெற் றிக்காக - பயன்பட்டதை எண்ணி எண்ணிப் பரவச மடைந்திடும் பருவமல்லவா இது! அந்த இளமை, திரும்பி வரப்போவதில்லை! வர வேண்டுமென்று வரம் கேட்கவும் போவதில்லை! கேட் டாலும் தரக்கூடிய வலிமை பெற்றோர் யாரும் இல்லை! ஆனால்; அதே நேரத்தில் வயதில் முதியோராயிருந் தாலும் வாய்மைப் போருக்கு என்றும் இளையாராய் இருந்திடல் வேண்டுமென்ற புரட்சிக் கவிஞரின் கருத் தைப் புறந்தள்ளி விட முடியுமோ! இளைஞர்களாய் இருந்து இயக்கம் வளர்த்து இன்று இணையற்ற கட்டுக் கோப்புடன் இலட்சியப் பாசறையாக அண்ணா வழியில் கழகம் நடத்துகிற வர்கள்; இப்போது தங்களைப் பின்பற்றி இளைஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/19&oldid=1718264" இலிருந்து மீள்விக்கப்பட்டது