இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அண்ணு ஜோதி! உடன்பிறப்பே, காலை வெயில் என்றாலும் கடுமையாகக் கொளுத் திக் கொண்டிருக்கிறது! நாங்கள் செல்லும் கார், திருச்சியிலிருந்து கரூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது! வழியில் சாலையில் ஒரு இளைஞன் கரூர் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்! சுடர்! அவன் கையில் கொழுந்து விட்டெரியும் ஒரு தீச் நெருப்பு, நிமிர்ந்து நின்றுதானே எரியும் உண்மை யான சுயமரியாதைக்காரனைப்போல!