உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


இளைஞர் அணித் தோழர் ஒவ்வொருவரும், இத் தகு பாராட்டுதலுக்கு உரிய வீரராகத் திகழ்பவர் என்பதில் ஐயமில்லை. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உள் ளத்தில் கொண்ட கொள்கைகளுக்காக உறுதி யோடு போராடுவது இளைஞர் சமுதாயத்திற் குள்ள இயல்பு. இந்த இயல்புக்கு ஏற்ப இளைஞர் சமுதாயம், நாட்டுக்கும் மக்களுக்கும் கழகக்கொடியின் கீழ் அணி வகுத்து முனைப்பாக தொண்டாற்றுவதற் கான உற்சாகத்தை அளிக்கும் வகையில், தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழு திய கடிதத்தை இச்சிறுநூல் வடிவில் வெளியிடு வதில் தி.மு.க. இளைஞர் அணி பெருமைப்படு கிறது. 0 தி.மு.க. இளைஞர் அணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/6&oldid=1718252" இலிருந்து மீள்விக்கப்பட்டது