கும். 2 பேசலாம்; பேசுகிறோம். இன்னும் சிலர் பேசிக்கோண்டே இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் கண்ணனுக்குக் கை யெழுத்துப் போடத் தெரியுமா என்றால், தலையை ஆட்டுகிறான். முத்தனோ மறந்துவிட்டது என்று கூறுகிறான்; முனியன் கை யெழுத்திடுகிறான். ஆனால் முன்னெழுத்தும் கடையெழுத்தும் சரியாக இருக்கிறது. இடையிலே உள்ள எழுத்துக்களோ சம்பந்தமற்றவையாக உள்ளன. இந் நிலை இருக்கிறது நாட்டு மக்களிலே மிகப் பெரும்பாலானவர்களுக்கு. கூரிய வாள் பல மான கேடயம், அஞ்சா நெஞ்சு; ஆனால் அந்த வீரனின் விழி பழுது. இந் நிலை நாட்டுக்குச் சிறப்பும் அளிக்காது. நல்லாட்சிக்கு வழி கிடைக்காது. நாட்டு நிலை உலக நிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டு நிலை மாறவேண்டும்-"வீட்டிற்கோர் புத்தகசாலை" என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்ல நிலை ஏற்படச் செய்யவேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை. மலைகண்டு, நதிகண்டு, மாநிதிகண்டு அல்ல, ஒரு நாட்டை உலகம் மதிப்பது- அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே மாநிலம் மதிக் மனவளம் வேண்டும்-மிக மிக விரைவில்-மிக மிக அதிக மாக எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்தநாட்டில் இது பெருங்கேடு. கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது மனவளம் இருக்கிறதா அவர்களின் வீடுகளாவது, நாட்டுக்குச் சிறப்பளிக்கும் நற் பண் புகள் செழிக்கும் பண்ணைகளாக. நாட்டுக்கு வலியும் வன வனப்பும் தேடித்தரும் கருத்துக்கள் மலரும் சோலையாக உள்ளனவா என் றால், இல்லை என்று பெருமூச்சுடன் கூறித்தான் ஆகவேண்டும்- உள்ளதை மறைக்காதிருக்க வேண்மானால், நாட்டு நிலைகண்டு உலகம் மதிக்கவேண்டுமானால், இந்தச் சூழ் நிலை மாறியாக வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டால் நமது நாட் டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெறமுடியும். நமது முன் சந் கதியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம் அடவியில், ஆற்றோரத்தில் பர்ண சாலைக்குப் பக்கத்தில், ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க ரு, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம்; ஏடும் எழுத்தாணியும்
பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/14
Appearance