3 இருந்த காலம்; இப்போதுள்ளது, உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம்-பாமரமக்கள் பாராளு காலம். மனவளத்தை அதிகப்படுத்த மார்க்கம், முன்பு இருந் ததைவிட அதிகம் உள்ள காலம். இதோ நான் பேசுகிறேன்- நீங்கள் கேட்கிறீர்கள். இடையே-பலப்பல மைல்கள்- நானோ நீங்களோ, தவசிகளல்லர்-அருளால் அல்ல இந்த ஒலி அங்கு கேட்பது - அறிவின் துணைகொண்டு விஞ்ஞானி ஆக்கித் தந்த சாதனம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவ்விதச் சாதனங்கள் இல்லா திருந்த நாட்கள், நமது முன்னோர்கள் காலம். இவ்வளவு வசதிகள் நமக்கிருந்தும், ஏன், மன வளம் இவ் வளவு குறைவாக இருக்கிறது? வீடுகளிலே மனவளத்தை அதி கரிக்கவோ, பாதுகாக்கவோ, நாம் முயற்சி செய்வதில்லை- வழி வகை தேடிக் கொள்வதில்லை. சாவி பெரும்பாலான வீடுகளின் அமைப்பையே பாருங்கள். கூடம் இருக்கும் ; விசேஷ காரியங்களுக்குப் பயன்பட! கூடத்து அறை இரண்டிருக்கும்; அதிலொன்று பூட்டியே இருக்கும். வீட்டின் அதிபரிடமிருக்கும். மற்றோர் அறையிலே-தொட் டிலோ, எணையோ இருக்கும். அங்குத் தூங்கும் குழந்தையை வேறோர் தொல்லைப்படுத்தும் - அதைவிடப் பெரிய குழந்தை, இதனைச் சமையலறையிலுள்ள தன் தாயிடம் சென்று கூறும். பூஜை அறையில் அப்பா இருப்பார் போய்ச்சொல் என்று தாய் கூறுவாள். அங்கு அவர் இருக்கமாட்டார். மாட்டுத் தொழு வத்துக்குப் பக்கத்திலுள்ள திண்ணையில் படுத்துக் கொண்டிருப் பார். நம் வீடு ஏறக்குறைய இதுபோலிருக்கும். கூடம் பாதுகாப் பான அறை-படுக்கை அறை சமையலறை பூஜையறை-இவை எல்லாம் இருக்கும் புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஒரு அறை தேடிப்பாருங்கள் மிகமிகக் கஷ்டம். பல வீடுகளிலே தூண்களின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத் தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால் புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள்-பதில் கூறமாட்டார்கள்; ஒரு புன்னகைத் தோன்றும். பைத்தியக்காரா! இது வீடு நீ என்ன இங்கு வந்து புத்தக சாலை கேட்கிறாயே, என்று பொருள் அந்தப் புன்னகைக்கு.
பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/15
Appearance