உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


பறவையைக் கொத்தவரும் வல்லூறுபோலச், சுக வாழ்வு தேடிய மனிதனை கொடுங்கோலர் வதைத்துமிருக்கிறார்கள், பல கஷ்டங்களுக்குப் பிறகு. மக்களாட்சி முறையே, சுகவாழ்வுக்குச் சரியான சாதனம் என்று முடிவு செய்திருக்கிறான்.

காட்டு அரசன் கெட்டவனானபோது, இந்த அரசன் அக்கிரமக்காரன், பாபி—இவன் ஒழிந்தால் போதும்—இவன் தம்பி நல்லவன்—மகன் சாது-தம்பியோ மகனோ பட்டத்துக்கு வந்தால் இப்படிக் கொடுமைப் படுத்தமாட்டான்; சுதந்தரத்தை அழிக்கமாட்டான். சுகவாழ்வு கிடைக்கும் என்ற பெருமூச்சுடன் பேசலாயினர். அதாவது ஆளை மாற்றிவிட்டால் போதும்; அநீதி அழிந்துவிடும்; நிம்மதி ஏற்படும் என்று எண்ணினர்.

ஒவ்வொரு காட்டரசனிடமும், ஏதேனும் ஒருவித கெட்ட நடவடிக்கை இருக்கக்கண்டு, சலித்துச் சலித்துப் போயான பிறகுதான், அரசனாக இருப்பவனுக்கு, மட்டற்ற அதிகாரத்தைத் தந்திருப்பதால், அவனுக்கு நிகர் யாரும் கிடையாது. அவன் ஆண்டவனுக்கு பதில் கூற வேண்டியவனேயொழிய, மக்களுக்கு அல்ல என்ற தத்துவம் இருக்கும் வரையில், யார் அரசனாக வந்தாலும் அக்கிரமம் செய்யத்தான் துணிவான்—சுதந்தரத்தை அழித்துக் கொண்டுதான் இருப்பான்—அரசனின் அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும்; கட்டுப்படுத்த வேண்டும்—அக்கிரமம் செய்தால் கேட்பதற்கும் திருத்துவதற்கும் வழிவகை இருக்கவேண்டும். அப்போது தான் சுதந்தரம் நிலைக்கும்; சுகவாழ்வு தழைக்கும் என்று பேசலாயினர். தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி, சண்டப் பிரசண்டனாவான் அல்லவா? அம்முறையில், அரசனின் அதிகாரத்தை அளவுப்படுத்திப் பார்த்தனர்.

பிறகு இந்த முறையும், சுதந்தரத்தைச் சூதுமதியினர் சூறையாடுவதைத் தடுக்க உதவவில்லை. எப்படியோ, அரசனானால், தன் அதிகாரத்தைக்கொண்டு மக்களை அச்சமூட்ட, அடக்க முடிந்தது.

எவ்வளவுதான் கட்டு, காவல் வைத்தாலும், அதிகாரத்தை மட்டுப்படுத்தினாலும், பயனில்லை. ஒருவன் அரசன் என்ற பத-