உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


கோபமாக இருக்கும்போது குப்பன் கூறுகிறான்: “அவனவன் ஜாதி அவனவனுக்கு உயர்வு தானய்யா” என்று. அவனே பிறகு குளிர்ந்த மனதுடன் இருக்குபோது “என்ன இருந்தாலும் அவர் மேல்ஜாதிக்காரர்” என்று பேசுகிறான். குளிர்ந்த மனதுடன் இருக்கும்போது மேல்ஜாதிக்காரன் கூறுகிறான் “குப்பா ஜாதியிலே என்னடா இருக்கிறது? எல்லாம் அவாள் அவாள் குணத்தைப் பொறுத்து இருக்கிறது” என்று. ஆனால், கோபம் பிறந்தாலோ அவர் கொக்கரிக்கிறார். “குதிரையும் கழுதையும் ஒன்றாகுமோ? கையில உள்ள 5 விரலும் ஒரே அளவோ” என்றெல்லாம். இது போலத்தான் இந்தச் சிறந்த இலட்சியத்தைப்பற்றி, மக்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தால், ஊஞ்சல் ஆடுவது போலச் சருக்குமரம் ஏறுவதுபோலச் சமதர்மப் பேச்சு காணப்படும். ஊராரும் முறையாகச் சிலராலும், உபதேச மார்க்கமாகச் சிலராலும், இது பேசப்படுகிறது. பேச்சிலே மட்டுமல்ல, இந்த முரண்பாடு; இதைப் பேசும் மக்கள் நிலையிலேயும் காணலாம்.

கோபால கிருஷ்ணையரும் கவுன்சிலர் தான், கோவிந்த செட்டியாரும் கவுன்சிலர்தான், கொண்டையாவும் கவுன்சிலர்தான், முனிசிபல் சபையிலே. அவர்களுக்குள் பேதமில்லை. ஒரேவிதமான அதிகாரம் அந்தஸ்து ஆசனம், எல்லாம். கோபால கிருஷ்ணையர் கொண்டுவரும் தீர்மானத்தை, கொண்டையா எதிர்க்கலாம், தடையேதும் கிடையாது. சட்டம் ஜாதியை கவனித்து தடைபோடாது. அரசியலில் அவர்கள் மூவரும் சமம். நகரசபை மண்டபத்திற்கு உள்ளே. வெளியே வந்ததும் மூவரும் வேறு வேறு—அங்கே சட்டமல்ல, சாஸ்திரம் அவர்களை ஆக்குகிறது. அந்தச் சாஸ்திரத்தைச் சட்டத்தால் தொடக்கூட முடிவதில்லை. கொண்டையாவை, கோபால கிருஷ்ணையர் சட்டப்படி நடத்துவார் நகரசபைக்குள்ளே; சாஸ்திர முறைப்படி நடந்துகொள்வார் வெளியே. கொண்டையா வெறும் கொண்டையாவாக இராமல், மிஸ்டர் கொண்டையா பி.ஏ ஆக இருந்தால் கோபால கிருஷ்ணையரும் கோவிந்த செட்டியாரும் அவரை நடத்தும் முறை சம்பிரதாய முறையிலிருந்து கொஞ்சம் மாறுபடக் கூடும். கனிவுடன் கூடப் பேசுவர். “என்ன செய்யலாம் அவர் அந்த ஜாதியிலே பிறந்துவிட்டார்” என்று. அதிலும் மிஸ்டர்