5
கிறதா என்ற கேள்வி நாளா வட்டத்திலே கிளம்பித்தீரும். கிளம்பும்போது வாழ்க்கையிலே குளிர்ச்சி அதிகமாக உள்ளவர் பொழுதுபோக்குத் தொழிலிலே கிடைக்கும் ஒரு அணாவைக் கொண்டு அடையும் களிப்பு அதிகமாகத்தான் இருக்கும்—கலெக்டர் பங்களாத் தோட்டத்துக் களாப்பழம், காலை முதல் மாலை வரை கழனியில் பாடுபட்டும் கால் வயிற்றுக்கும் கட்டி வரவில்லையே என்று கதறும் கந்தன் ஓய்வு வேளையில் உழைத்துப் பெறும் பலாப் பழத்தைவிட அதிக இனிப்புதான் அதிக களிப்புதான் கிடைக்கும்.
ஓய்வு என்ற பெயரால் புதிய உழைப்பு—அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் வாழ்க்கைச் செலவிற்கும் பயன்பட வேண்டும், என்ற நிர்ப்பந்தம் இருந்து விட்டால் அது, ஓய்வுமல்ல பொழுதுபோக்குமாகாது. எனவே கிராம மக்களுக்காகக் கூறப்படும் யோசனைகள் ஓய்வையும் உழவனுக்குப் புதிய எஜமானாக்கி விடுகிறது, நண்பனாக்கவில்லை.
ஓய்வு—உயர்ந்த பண்புள்ள நண்பன் மூலம் நாம் என்ன பெற முடியுமோ அவ்விதமான மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைத்துக் கொள்ளவேண்டும். அது இன்றுள்ள சமூக, பொருளாதார அமைப்பு முறையில், சாத்தியமாகுமா என்பது மிகமிகச் சந்தேகம்.
ஓய்வு நேரத்தை, உல்லாசமாகக் கழிக்க வேண்டுமானால் அதற்காகச் செலவிட வகை கிடைக்கவேண்டும்—செலவு பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்துக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும். ஓய்வின் சுவையைப் பருகி—வேலைக் களைப்பைப் போக்கிக் கொள்ளவேண்டும். களைப்பைப் போக்கிக்கொள்ள வெப்ப நாட்களில் குளிர்ந்த பானமும், குளிர் நாட்களிலே சூடான பானமும், எல்லா நாட்களிலும் இனிய முகமும், அன்பு மொழியும், கொண்ட குடும்பமும் தேவை—இது கிடைத்தான பிறகு, ஓய்வைக் கழிக்கும் முறையைக் கண்டறியும்போது அறிவும், அறிந்த பிறகு அந்த முறைப்படி பொழுது போக்கும் வசதியும் ஏற்படவேண்டும்.
ஓய்வு நாட்களிலே, படகு வீட்டிலே தங்கி காஷ்மீர் காட்சியைக் கண்டு களிக்க வாருங்கள் குடும்பத்துடன்—என்ற விளம்பரத்தைக் காணும் ஆபீஸ் அலுவலர்கள், கதையிலே நந்தனார் பாடுவதாகச் சொல்வார்களே, அதைப்போல, நாளைப் போகாமலிருப்பேனோ நான்— என்று பாடி அழ முடியுமே தவிர, வேறென்ன செய்வது?
உதக மண்டலத்து வனப்பு, கொடைக்கானல் குளிர்ச்சி, குற்றாலக் கவர்ச்சி, இவைகளைக் கண்டு களிக்கும் பொழுதுபோக்கு—ஓய்வு—எவ்வளவு பேருக்குக் கிடைக்கமுடியும்? வாழ்க்கைத்தரம் பொதுவாக உயர்ந்தாலொழிய இத்தகைய ‘உல்லாசம்’ சிலர் சொல்லப் பலர் அதிசயிக்கும் பேச்சளவாகத்தான் இருந்து தீரும். வாழ்க்-