பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்ச மகள் செயல்

101

தெரிந்தால் பிறகு தங்களுக்கு அதன் அருமையும் பெருமையும் தெரியும்.”

“எங்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற அக்கறை உனக்கு ஏன் வந்தது? உனக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? உன் வார்த்தைகளை நம்பலாம் என்பதற்கு என்ன பிணை?” என்று அரசன் கேள்விகளை அடுக்கினான்.

“இன்னும் பல கேள்விகளைத் தாங்கள் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். தங்களுக்கு நன்மை செய்வதைவிட அதிகமானுக்குத் தீமை செய்வதுதான் என் நோக்கம். அந்தத் திறத்தால் தாங்களும் நானும் ஒத்த நிலையில் இருக்கிறோம். நான் அவனைப் பழி வாங்க வேண்டும். அதனைத் தங்களைக் கொண்டு முடித்துக்கொள்ளலாம் என்ற ஆவலோடு வந்திருக்கிறேன்.”

“உன் பேச்சைக் கேட்டு எனக்கு உன்னைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. சிரிப்பதா, சினப்பதா என்றும் தெரியவில்லை. ஏதோ செய்தி சொல்ல வந்தேன் என்றாய். இப்போது அதிகமானைப் பழி வாங்கவேண்டும் என்கிறாய். அதற்கு நாங்கள் கருவியாக இருக்க வேண்டும் என்கிறாய். நீ சொல்வது இன்னதென்று தெரிந்துகொண்டுதான் பேசுகிறாயா?”

“மன்னர் பெருமான் சற்றே பொறுமையோடு கேட்க வேண்டும். ஓர் இளம் பெண் துணிவாகத் தங்களைத் தேடி வந்திருப்பதைக் கொண்டே ஏதோ அரிய செய்தி இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான் கோட்டைக்குள் போகும் வழி எனக்குத் தெரியும்.”

“கோட்டைக்குள் போக வாயிலையல்லாமல் வேறு வழி இருக்கிறதா?”

“ஆம்; ஒரு சுருங்கை வழி இருக்கிறது. அதன் வழியாகத்தான் உள்ளே உணவுப் பொருள்கள்