பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. முடிவு


திகமான் புண்பட்டுக் கிடக்கிறான் என்ற செய்தியால் அவன் படையினருக்குச் சிறிது சோர்வு தட்டியது. ஆனால் பகைப் படைகளுக்கோ இரு மடங்கு வீறு உண்டாயிற்று. அத்தகைய சமயத்தில் பாண்டியனும் சோழனும் படைகளுடன் வந்து சேர்ந்தனர்; சேரன் படையைச் சூழ்ந்து கொண்டனர். அதற்கு முதல் நாள் பெருஞ்சேரல் இரும்பொறை, ‘இனி இரண்டே நாளில் வெற்றி மகளை நாம் கைப் பிடிப்போம்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான். அதிகமான் போர்க்களத்தில் இரண்டு மூன்று நாட்கள் தோன்றாததால் தகடூர்ப் படையிலே தளர்ச்சி உண்டானதை அறிந்தே, அவ்வாறு எண்ணினான். ஆனால் இப்போது அந்த எண்ணம் சிதறியது. புதிய துணைப்படைகள் மதுரையிலிருந்தும் உறையூரிலிருந்தும் வந்து விட்டன. ‘இந்தப் போரிலே ஏன் தலையிட்டோம்!’ என்ற சலிப்புக்கூடச் சிறிது அவன் மனத்தில் நிழலாடியது.

அதைக் குறிப்பாக உணர்ந்த மலையமான் திருமுடிக்காரி அவனுக்குப் புது முறுக்கு ஏற்றவேண்டுமென்பதைத் தெளிந்தான். “மன்னர்பிரான் இப்போதுதான் தம்முடைய வீரத்தையும் மிடுக்கையும் காட்ட வேண்டும். அன்று அதிகமான் உயிரை என் வேல் குடித்திருக்கவேண்டும். மயிரிழை தப்பியது; புண்படுத்தியதோடு நின்றது. ஆனால் என்ன? இனி அவன் போர் முனைக்கு வந்து போர் செய்வான் என்று நான் நினைக்கவில்லை. கோட்டைக்குள் இருந்தபடியே போரை இப்படி இப்படி நடத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருப்பான். ஒருகால் மீண்டும் போர்க் களத்துக்கு