பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவு

117

அவர்களுக்குத் துணை வந்துகொண்டே இருப்பார்கள். வெற்றி கிட்டாமல் செல்லும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றுகிறது எனக்கு” என்று அவன் யாவரையும் உணர்ச்சியும் துடிதுடிப்பும் கொள்ளும்படி தூண்டனான்; அவனுடைய பேச்சினால் நல்ல பயன் உண்டாயிற்று.

மறுநாள் போர் முனையிலே சேரன் படை புதிய முறைகளை மேற்கொண்டு போர் செய்தது. பிற படை தம்மை வளைக்காத வகையில் அணி வகுத்துக்கொண்டார்கள். அன்று நடந்த கடும் போரிலே பாண்டியர் படைத் தலைவன் பட்டான்; அதற்குமேல் அந்தப் படைக்குப் போரில் ஊக்கம் இல்லை; கடனுக்கே போர் செய்தது. இரண்டே நாளில் தகடூர் வீரர்கள் கலகலத்துப் போனார்கள். மூன்றாவது நாள் அதிகமான் படையின் முன்னிலையில் வந்து நின்றான். பாண்டியனும் சோழனும் இடையிலே நின்றார்கள். காரி அந்தப் படையின் பின்னிருந்து தாக்கும்படி ஒரு படையை அனுப்பினான். அதற்குத் தலைமை தாங்கினான் பிட்டங் கொற்றன். முன்னே தானே நின்று படையைச் செலுத்தினான். சேரமான் படையின் நடுவே நின்றான். அன்று எப்படியாவது போருக்கு ஒரு முடிவைக் கண்டுவிடுவதென்று உறுதி பூண்டு மேலே மேலே முன்னேறினான் மலையமான். சோழனைப் பின்னிருந்து வந்த படை தாக்கியது. அவன் முடி குலைந்தான். அதே சமயத்தில் மலையமான் கை வேலோடு அதிகமானுடைய பட்டத்துயானையைக் குத்தினான். அதனால் மானம் மிக்க அதிகமான் தன் வேலை ஓங்கிக்கொண்டு வந்தான். அந்தச் சமயம் பார்த்துச் சேரர் படையில் இருந்த ஒரு சிறிய தலைவன் தன் வேலை அவன் மார்பில் ஓச்சினான். அது அவன் மார்பிலே நன்றாக ஆழச் சென்றது. அதிகமான் வீழ்ந்தான்; அக்கணத்திலே