பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்

51

தனர் வீரர். “என் அயல்நாட்டுத் தலைவனும் என் நண்பனுமாகிய ஓரியை அறநெறி திறம்பிக் கொன்றதற்காகவே இப்போது கோவலூரைத் தாக்குகிறேன்” என்று முரசறையச் செய்தான் அதிகமான்.

போர்மூண்டது;இருபடையும் மிடுக்குடன்ஒன்றை ஒன்று தாக்கின. காரியின் படை தளர்ச்சி காட்டியது. அந்தச் சமயம் பார்த்து அதிகமான்வீரர்களைத் தூண்டினான். காரி இந்த நிலையை நன்றாக அளவிட்டு அறிந்தான். மேற்கொண்டு போரிட்டால் தனக்குத் தோல்விஉறுதி என்பதைஉணர்ந்தான். தான் ஓரியைக் கொன்றதற்கு ஈடாக அதிகமான் தன்னைக் கண்டால் கொன்றுவிடுவான் என்றஅச்சமும்அவனுக்கு உண்டாயிற்று. அதனால் அவன் இல்லாத பக்கமாகச் சென்று போர் செய்தான். இனி எதிர்த்தால் உயிருக்கு ஊறுபாடு நிகழும் என்ற நிலைவந்தவுடன் திருக்கோவலூரை விட்டுவிடத் தீர்மானித்தான். அவனும் அவன் படை வீரர் சிலரும் பின் வாங்கி ஓடி ஒளிந்தனர். ஏனையவர்கள் சரண் அடைந்தனர்.

வெற்றிமாலையைப்புனைந்துநின்ற அதிகமானுக்கு மற்றொருகளிப்புச்செய்தி காத்திருந்தது.தகடூரிலிருந்து வந்த தூதுவன் ஒருவன் அவனுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்ற மங்கலச் செய்தியைச் சொன்னான். கோவலூர் வெற்றியோடு இந்தச் செய்தியும் சேர்ந்து அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை உண்டாக்கின.

உடனே, தன் படைத் தலைவர்களிடம் வேண்டியவற்றைச் செய்யும்படி சொல்லிவிட்டுத்தன் குதிரையில் ஊர்ந்து போர்க்கோலத்துடனேவிரைவாகச்சென்றான் அதிகமான். தகடூரை அடைந்து நேரே அந்தப்புரத்தை அணுகினான். அவன் உள்ளூரில் இருந்திருந்தால் நீராடிப் புனைவனபுனைந்து,பூசுவனபூசி,பெரியோர்களை முன்னிட்டுக்கொன்டு வந்திருப்பான். இப்போதோ