பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயலும் இசையும்

57


இதை ஔவையார் உணர்ந்தார். அந்தப் பாடல்களையெல்லாம் ஒரு சேரத் தொகுத்தார். தாம் அறிந்த பெரிய பாண் புலவர் ஒருவரை அழைத்து வரச் செய்தார். அவர் வந்து அந்தப் பாடல்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து, எந்த எந்தப் பண்ணில் அமைத்தால் நன்றாக இருக்குமோ அந்த அந்தப் பண்ணை அமைத்துத் தாமே பாடிக்காட்டினார். அந்தப் பாடல்களைக் கேட்கப் பலர் கூடினர். இயற்றமிழ்ப் புலவரும் இசைத் தமிழ் வல்லுநர்களும் அமைச்சர்களும் சான்றோர்களும் கூடிய அந்தப் பேரவையில் இயலும் இசையும் கைவந்த ஒரு பெண்மணியும் இருந்தாள். அவளுக்கு நாகை என்று பெயர். அவள் அதிகமான் நெடுமான் அஞ்சியின் அத்தை மகள். அந்தப் பாண்மகனார் பாடப் பாட அவற்றைக் கேட்டு இன்புற்றுச் சுவைத்தாள் அவள். அந்த இசைப் புலவர் தாமே சில புதிய உருப்படிகளைப் பாடினார். ஏழு சுரங்களையும் உடையவற்றைப் பண் என்றும், அந்தக் கணக்கில் குறைபவற்றைத் திறம் என்றும் சொல்வது இசைத்தமிழ் மரபு. புதிய பாடல்களைப் பாடிய புலவர் சில திறங்களில் அமைத்த உருப்படிகளையும் பாடினார். அவை மற்ற எல்லாப் பாடல்களிலும் சிறந்தனவாக, உள்ளத்தை ஈர்ப்பனவாக அமைந்தன.

அஞ்சியின் அத்தை மகளாகிய நாகைக்கு இந்தத் திறங்களின் இனிமையைப் பாராட்டவேண்டும் என்று தோன்றியது. அவள் தான் பாடிய அகப்பொருட்பாட்டு ஒன்றால் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டாள்.

ஒரு பெண்மணி தன் கணவன் தனக்கு மிகவும் இனியவனாக இருக்கின்றான் என்று சொல்ல வருகிறாள். “அவன் திருமணம் புரிந்துகொண்ட நாளில் எவ்வளவு ஆர்வத்தோடு இனியனாக இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறானா?”