பக்கம்:அதிசய மின்னணு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புத் துறையில் 111 களாகவும், தாக்கும் ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன. விமானத்திலுள்ளோர் எதிரிகளின் கண்ணுக்குப் படாமல் பறப்பதற்கும், அதே சமயத்தில் எதிரிகளே. ஊறுபடுத்து வதற்கும் இக்கருவிகள் பெரிதும் பயன்படுகின்றன. சில விமானங்கள் அகச் சிவப்புக் கதிர்களுடன் கூடிய பிரத்தியேகமான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சாதனத்தையும் கொண்டுள்ளன. இவை தமக்கு நேராகக் கீழே என்ன நிகழ்ந்துகொண்டுள்ளன என்பதைத் தம்முடைய தலைமை நிலையங்கட்கு ஒளிபரப்புதல்கூடும். அவை தம்மிடம் ஏற்கும் கருவியையும் கொண்டிருந்து காமிராவும் தாம் பறக்கும் - * e. * - - - * புலத்தில் வேலை செய்தால் விமானிகள் தாம் நிலத்துக்கு இறங்குவதைத் தாமாகவே கவனித்துக் கொள்ளலாம். தொலைவிலிருந்துகொண்டே போர்க்கள ஏற்பாடுகளை யும் போர் நடப்பதையும் பார்ப்பதற்குப் பிரத்தியேகமான மின்னுக்கப்பொறியுடன் இணைக்கப்பெற்றுள்ள நகரும் தொலைக்காட்சிக் காமிராக்கள் பயன்படுகின்றன. இன்னும் எத்தனையோ முறைகளில் இத்தகைய கருவிகள் போரில் பயன்படுகின்றன. வானெலியால் கட்டுப்படுத்தப்பெறும் விமானங்கள் அறிவியல் சோதனைகளில் பெரும்பங்கு கொள்ளுகின்றன. இத்தகைய விமானங்களை விமானிகளின்றியே அனுப்பலாம்; விமானிகளுக்கு விபத்து ஏற்படலாம் என்று கருதுங்கால் இங்ங்னம் செய்யப்பெறுகின்றது. இத்தகைய விமானங்களை விமானி தொலைவிலிருந்துகொண்டே கட்டுப்படுத்தி இயக்கு கின்ருன், விமானி பல மைல்களுக்கு அப்பால் தரையில் இருக்கலாம்; அல்லது ஒரு வண்டியில் இருக்கலாம்: அல்லது விமானத்தின் அருகில் வேருெரு விமானத்தில் பறந்து கொண்டுமிருக்கலாம். இந்த விமானங்கள் தம்மிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/119&oldid=735086" இலிருந்து மீள்விக்கப்பட்டது