பக்கம்:அதிசய மின்னணு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 அதிசய மின்னணு முள்ள கருவிகளில் அறிவியல் புள்ளி விவரங்களைப் (scientific data) பதிவுசெய்து கொண்டு திரும்பிவிடும். தம் மிட முள் ள கருவிகளுக்கும் விமானத்திலுள்ள வானுெலிக்கும் கட்டுப்பாடு அமைப்பு இருப்பதால், தான் செய்வதையெல்லாம் விமானத்திலுள்ள கட்டுப்படுத்தும் கருவிகள் செய்யும், சில சமயம் ஒரு தொலைக்காட்சிக் காமிராவை இந்த விமானத்தில் பொருத்திவிடுவதுமுண்டு; இது கருவியமைப்புடன் குவியச் செய்யப்பெற்றிருக்கும். தொலைவிலிருந்துகொண்டே விமானி கருவியமைப்பிலுள்ள முகப்பு முட்கள் காட்டுவதைப் படிக்கலாம். மிகத் தொலை விடங்கட்குப் பறக்க நேரிடும்பொழுது இச்செயல் இரண்டு மூன்று விமானிகளால் நிறைவேற்றப்பெறுகின்றது. ஒரு விமானி இவ்விமானத்தை அனுப்புகின்ருன் , மற்ருெரு விமானி வானத்திலிருந்துகொண்டு கட்டுப்பாட்டினைப் பெறுகின்ருன் , இன்ஞெரு விமானி தொலைவிலுள்ள புலத்திலிருந்துகொண்டு அதனைக் கீழிறக்குகின்ருன். இந்த விமானங்களைப்போலவே வானெலிக் கட்டுப் பாட்டமைப்புடன் மிக்க விரைவாகப் பிரயாணம்செய்யும் இராக்கெட்டுகளே (rockets) அலைகடலுக்கு அப்பாலும் கண்டங் களுக்கு அப்பாலும் அனுப்பலாம். சில சமயம் இவற்றை வேறு கோள்களை நோக்கியும் ஏவி அயனப்பாதைகளில் பிரயாணம்செய்து அறிவியல் புள்ளிவிவரங்களைக்கொண்டு வருமாறு செய்யலாம். இன்று இத்தகைய இராக்கெட்டுக்களை அமெரிக்கா, இரஷ்யா போன்ற நாடுகள் அனுப்பிவருவதைச் செய்தித்தாள்களில் காண்கின்ருேம். இவை பிரத்தியேகமான நிலையங்களில் தங்கியிருக்கும் அறிவியலறிஞர்கட்குத் தம் முடனிருக்கும் கருவிகளில் புள்ளி விவரங்களைப் பதியப் பதிய உடனுக்குடன் அவற்றை அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

  • akogoso
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/120&oldid=735088" இலிருந்து மீள்விக்கப்பட்டது