பக்கம்:அதிசய மின்னணு.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. விரியும் அறிவியல் உலகம் அலாவுதீன் என்ற சிறுவன், தன் கையிலிருந்த அற்புத விளக்கினைக்கொண்டு புதிய புதிய அதிசயக்காட்சி களைக் கண்டதாகக் கதையில் படித்துள்ளோம். இத்தகைய அற்புத விளக்கிைேடொத்த ஆய்வு மனப்பான்மை - குறு குறுப்பான இயல்பு - அறிவியலறிஞர்களிடம் அமைந்திருப் பதால் அவர்கள் நிமிடங்கள்தோறும் புதிய புதிய புத்தமைப் புக்களை அமைத்து வருகின்றனர். இவற்றின் துணையால் அறிவியல் உலகம்’ விரிந்து கொண்டே போகின்றது. இந்த அறிவியல் உலகில், கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கனத்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?" என்று கவிஞன் வாக்கில் நாமும் பேசலாம். இந்தப் புதிய உலகில் புதிய "பொறியமைப்பு மூளை கள்' மின்னணு முறையில் அமைந்த கருவிகளால் பேசித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடும். இவை அரைமணி தேசத்தில் ஐம்பது இலட்சம் விடைகளைக் கணக்கிடலும் கூடும். அந்த விடைகளை அவை சரியான இடங்களிலும் இணைக்கவும் செய்யும். மின்னணு முறையில் அமைக்கப்பெற்றுச் சீர்படுத்தப் பெறும் பொறியமைப்பு ஒன்றில்ை மானிட மனத்திளுல் கற்பனையிலும் காண முடியாத ஒர் ஒலியை அல்லது கூட் டொலியை உண்டாக்குதல் கூடும். ஓர் இசைக் கருவிகூட இல்லாமல் ஓர் இசையரங்கினையே மின்னணு முறையில் -- * பாதியார் : பாஞ்சாலி சபதம்-பாடல் 149 3سسهلكلة .تقس