பக்கம்:அதிசய மின்னணு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

for எம்மருங்கும் மின்னணுவியல் 57 ஏற்கும் கருவி (receiver) யொன்று இவற்றை ஏற்பதற்குக் காத்திருக்கின்றது. வன்மை குறைந்த வானெலி சைகைச் செய்தி (radi) signal) ஏற்றுக் கொள்ளப்பெற்றுப் பெருக்கப்பெறுங்கால், அஃது ஒரு பதிவு செய்யும் குழலினுள் (recorder tube) செல்லு கின்றது. இக் குழல் மேற்படி சைகைச் செய்தியை முதல் ஒளிக் குழலால் செய்யப்பெற்ற எல்லா மாற்றங்களுடனும் ஏற்று மீண்டும் அதனை ஒளியாக மாற்றுகின்றது. பதிவு செய்யும் குழலின் கோடியிலுள்ள ஒரு பிரத்தியேகமான இடத்தைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் ஒளிவெளியே போகாதவாறு நன்கு பூசப்பெற்றுள்ளது. இந்த ஒளிக் கற்றை, குழலுக்குள் வரும் மின்னுேட்டத்தைப் போலவே மாறிக்கொண்டு (fluctuating) இருக்கும். இந்த ஒளி பல கண்ணுடிவில்லைகளினுள் (lens) நுழைந்து செல்லுகின்றது: இவ்வாறு செல்லுங்கால் அவை இதனை முதல் ஒளியைப் போலவே ஓர் ஊசியொளியாகக் குறுகச்செய்கின்றது. இது வும் ஒரு நிலையான கற்றையாக இராமல் மின்னேட்டத் தைப் போலவே மாறிக்கொண்டே இருக்கின்றது. இது தான் படம். இந்த ஒளிக்கற்றையின் எதிரில் முதல் உருளை யைப் போலவே சுழன்றுகொண்டிருக்கும் மற்ருேர் உருளை உள்ளது. இந்த உருளையின்மீது நொடிப்படங்கள் (Snap shots) அச்சிடக் கூடியதைப்போன்ற உணர்வூட்டப்பெற்ற தாள் (senstized paper) சுற்றப்பெற்றுள்ளது. இந்தத் தாளின் மீது விழும் ஒளி தன்னுடைய மாற்றங்களால் படத்தை அச்சிடுகின்றது. இந்தப் படமே செய்தித் தாள் களில் அச்சிடப் பெறுகின்றது. உருவ நேர்படியைப் பதிவு செய்யும் கருவியுடன் வேறு ஒரு மின்னணுக்குழல் பயன்படுத்தப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/65&oldid=735155" இலிருந்து மீள்விக்கப்பட்டது