பக்கம்:அதிசய மின்னணு.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆராய்ச்சியில் 91. வில்லைகள் இல்லை. அவற்றிற்குப் பதிலாக மின்னணுக் கற்றையைக் குவியம் (locus) செய்வதற்குக் காந்தப் புலன்கள் பயன்படுத்தப்பெறுகின்றன. கண்ணுடி வில்லைகள் ஒளிக் கற்றையை என்ன செய்கின்றனவோ அதையே இந்தக் காந்த வில்லைகள் மின்னனுக்கற்றையையும் செய்கின்றன. மின்னணுக்கற்றை துப்பாக்கியினின்று பாய்ந்து வந்த தும், அது காந்த வில்லையினுள் செல்லுகின்றது. காந்த வில்லையென்பது படத்தில் காட்டப்பெற்றிருப்பதுபோல் அமைக்கப்பெற்ற ஒரு கம்பிச் சுருளாகும். இந்தக் காந்த வில்லை இக்கற்றையைச் சோதனைப்பொருளின் மீது குவியச் செய்கின்றது. மின்னணுக்கள் சோதனைப்பொருளைத் தாக்கும்பொழுது தாம் தாக்கும் இடத்தில் தம்முடைய திண்மைக்கேற்றவாறு அதிகமாகவோ குறைவாகவோ அதனை ஊடுருவிச் செல்லுகின்றன. அந்தச் சோதனைப் பொருளின் கோலத்திலேயே அவை மறுபுறத்தில் வெளி வருகின்றன. - இந்தக்கோலம் மீண்டும் குவியம்செய்யப்பெற்று பெரி தாக்கப்பெறுகின்றது. அதன் பிறகு இவ்வாறு பெரிதாக் கின வடிவத்தில் ஒரு பகுதி மீண்டும் மற்ருெரு காந்தவில்லை வால் பெரிதாக்கப்பெறுகின்றது. இந்த இறுதியான suiąsini si zsfGtë fisorussi Eği (fluorescent screen) விழச் செய்யப்பெறுகின்றது. மின்னணுக்கள் தாக்கும் பொழுது இத்திரை ஒளிருகின்றது. அதிக மின்னணுக்கள் உள்ள இடத்தில் அதிக ஒளியும், சோதனைப்பொருள் அதிகத் திண்மையாக இருக்கும் பகுதியில் குறைந்த மின் ணுைக்கள் ஊடுருவிச் செல்வதால் குறைந்த ஒளியுமாக ஏற்படுகின்றன. அறிவியலறிஞர்கள் சோதனைப் ,ெ ளை ஒளிப் تماسه படமாக எடுக்க விரும்பினுல் அவர்கள் ஒளிரும் திர்ைக்குப்