பக்கம்:அநுக்கிரகா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அநுக்கிரகா

"அநுவுக்கு ஆபத்து எதுவும் வந்துடக் கூடாதேன்னு தான்..."

“ஆபத்தாவது, ஒண்ணாவது? கிட்ட வந்தான்னா நம்ம ஆளுங்க எலும்பைப் பார்ட் பார்ட்டா கழட்டி வச்சுடுவானுங்க, அதெல்லாம் வேண்டிய ஏற்பாடு பண்ணியிருக்கேன். இங்கதான் நம்ம வீட்லே அதிக கலாட்டா நடக்கும். சுத்தி ஒரே ஸ்லம் பாருங்க. அதனாலே தான் வோட்டு எண்ற இடத்திலே நம்ம ஆளுங்களை ஏற்பாடு பண்ணிட்டு உங்களுக்குத் துணையா இருக்கணும்னு நான் நம்ம ஆளுங் களோட இங்கே வந்துட்டேன்,

அவனுடைய முன் யோசனையும், முன் ஜாக்கிரதையும் முத்தையாவுக்கு வியப்பளித்தன, இரவு பதினொன்றரை மணி டி.வி. ஸ்பெஷல் புலட்டனில் அநுக்கிரகாவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. பதினேழாயிரத்துச் சொச்சம் வோட்டு வித்தியாசத்தில் அவள் கனிவண்ணனைத் தோல்வியுறச் செய்திருந்தாள். தயாராக வாங்கி வைத்திருந்த சாக்லேட், ஸ்வீட் பொட்டலங்களைப் பிரித்து, டிரேயில் குவித்து முதலில் பொன்னுரங்கத்திற்கும், அங்கிருந்த மற்றவர்களுக்கும் கொடுக்கச் செய்தார் முத்தையா,

"உங்க வயசுக்கு இப்பிடித் தூக்கம் விழிக்கிறது ஒத்துக்குங்களா? நீங்க வேணும்னா போய்ப் படுங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன். பாப்பா வீடு திரும்ப எப்பிடியும் மூணு மணி ஆயிடுமுங்க, தொகுதி பூரா ஜீப்பில போயி ஒரு சுத்துச் சுத்திட்டு ஊர்கோலமா வர்றத்துக்கு ஏற் பாடுங்க.".

"அதெல்லாம் எதுக்குப்பா? எவனாவது கல்லெறி, சோடாப் புட்டின்னு கிளம்பப் போறான்?"

"தொடுவானா? நம்ப செயல் வீரர்கள் இருக்காங்க.."

அவன் பதில் கூறிய தெம்பைப் பார்த்த முத்தையா கவலை விட்டார். சில வினாடிகளில் அவர் வீட்டு வாசலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/100&oldid=1259240" இலிருந்து மீள்விக்கப்பட்டது