பக்கம்:அநுக்கிரகா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அநுக்கிரகா

"அவங்க மந்திரியாறதுக்குத்தான் பிரைட் சான்ஸஸ் இருக்கு."

"பந்தயம் போடறீங்களா? நீங்கதான் மந்திரி யாவுறீங்க."

"கஷ்டம்! நமக்கிருக்கிற ஆசையில் நீங்களாச் சொல்றீங்க தலைவரே!"

"பார்த்துட்டே இருங்க! நான் சொன்னதை நிரூபிச்சுக் காண்பிக்கிறேன். நடக்குதா இல்லியா பாருங்க."

பொன்னுரங்கம் உறுதியாகச் சொன்னான். முத்தையாவும் அநுக்கிரகாவும் அதை நம்பவில்லை. தாழ்த்தப் பட்டவர்கள், பார்ட்டியின் சீனியர் எம். எல். ஏ.க்கள் இருக்கும்போது தன்னை மந்திரியாக்கத் தலைவர் துணிவார் என அதுக்கிரகா நம்பவில்லை.


16

தலைவருக்கு மாலையணிவித்து விட்டு வீடு திரும்பியதும் பொன்னுரங்கம் முத்தையாவையும் உடன் வைத்துக் கொண்டு டெலிஃபோன் அருகில் போய் உட்கார்ந்தான். முத்தையா ஓர் அரசியல் குருநாதரின் அருகில் அமரும் குட்டி சீடனைப் போல் அவனருகே கவனித்தபடி இருந்தார்.

"எம்.எல்.ஏ, அநுக்கிரகா வீட்டிலேருந்து பொன்னுரங்கம் பேசறேன். காலையில் முதல் ஆளா அம்மாதான் தலைவரைப் போய்ப் பார்த்து மாலை போட்டாங்க. தலைவரிட்ட பிரியமாப் பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னிக்கு மத்தியானம் ஹோட்டல் ரோஸ் கார்டன்ஸ்லே அம்மா பத்திரிகைக்காரங்களுக்கு ஒரு லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. அவசியம் வந்துடுங்க. ஏதாச்சும் நியூஸ் உண்டான்னு தானே கேட்கறீங்க? உண்டு. நிச்சயமாப் பெரிய நியூஸே இருக்கு. பிரஸ் கான்பரன்ஸுக்கு வந்துடுங்க. அங்கே சொல்றேன் என்று எல்லாப் பத்திரிகைகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/106&oldid=1263994" இலிருந்து மீள்விக்கப்பட்டது