பக்கம்:அநுக்கிரகா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

125

சொல்லித் தன் தந்தையைச் சந்திக்க அனுமதி பெற்றுக் கொண்டாள். "எதற்கு இந்தச் சந்திப்பு இப்போது?" என்றார் அவர்.

அநுக்கிரகா தெளிவாக மறுமொழி கூறினாள் :

"நம்ம அவசரச் சட்டத்தின்படி ஸ்லம் கிளியரன்ஸ் திட்டத்தின் கீழ் உலக பாங்க் உதவியோடு அடுக்குமாடி வீடு கட்டும் திட்டத்துக்காக 'ஆவாரம்பட்டு ஹவுஸ்' முழுக்கவும் எடுத்துக்கிட்டு அந்த ஏரியாவிலே அரசு நிர்ணயிச்ச விலையைக் காம்பென்சேஷனாய்க் கொடுத்துடறோம். அந்த ஒரு காம்பவுண்டிலே மட்டும் முப்பது அடுக்கு மாடி வீடுகள் கட்டலாம். அது சம்பந்தமான நோட்டீஸ் இன்னிக்கு செக்ஷன்ல கையெழுத்தாகி அவருக்குப் போகிறது. அவர் என் தந்தை. ஆனாலும் நிர்த்தாட்சண்யமாக அவருடைய சொத்தைத்தான் முதல்லே 'அக்வேர்' செய்ய உத்தரவு போட்டிருக்கிறேன். எனினும் தனிப்பட்ட முறையில் அதே வீட்டில் பிறந்து வளர்ந்த அவரது மகள் என்ற முறையில் அவரை நேரில் பார்த்துச் சமாதானம் சொல்ல வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன்."

"ஒரு பிரைவேட் விஸிட்டாக் காதும் காதும் வச்சாப்பிலே போயிட்டு வந்துடறது தப்பில்லே! ஆனா அரசு முறையிலே அமைச்சர்ங்கிற ஹோதாவில போவாதிங்க," என்று அட்வைஸ் செய்தார் முதல்வர்.

அவளும் அப்படியே செய்வதாகக் கூறி விடை பெற்றாள்.


20

ஃபோன் செய்து. அப்பாவிடம் தான் வரப்போவதைச் சொல்லிவிட்டு போவதா அல்லது திடுதிப்பென்று போய் நிற்பதா என்று அநுக்கிரகா யோசித்தாள். போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் சொல்லி அவர்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/127&oldid=1265110" இலிருந்து மீள்விக்கப்பட்டது