பக்கம்:அநுக்கிரகா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அநுக்கிரகா

"தினசரி வரச்சொன்னாலும் நான் தயாருங்க.."

ரூபாய் ஐம்பது பற்றிய ஞாபகத்தில் எங்கே தினசரி வந்துவிடப் போகிறாரோ என்று பயந்து பதறி, அதெல்லாம் வேண்டாம்! உங்களுக்கும் வேற வேலை இருக்கும். வாரத்துக்கு ஒரு நாள் ரெண்டு நாள் வாங்க, போறும். ரொம்ப உங்களைச் சிரமப்படுத்தக் கூடாது பாருங்க? என்று அவசர அவசரமாகக் குறுக்கிட்டுத் தடுத்தார் முத்தையா,


5

மாபெரும் போஸ்டர்கள், தட்டி விளம்பரங்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்ற தடபுடல்களுடனே ம. மு. க. வினரின் மாபெரும் ஏற்பாடாகிய நெல்லுப்பேட்டை மைதானப் பொதுக்கூட்டத்துக்கு இரண்டு நாள் முன்னாலேயிருந்து ஏகப்பட்ட அரசியல் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைத் திரட்டி மனப்பாடம் செய்து, நிலைக்கண்ணாடி முன் நின்று பலமுறை திரும்பத் திரும்பப் பேசிப் பார்த்துக்கொண்டாள் அநுக்கிரகா.

என்ன புடவை கட்டிக்கொண்டு போவது? எப்படிச் சிங்காரித்துக் கொள்வது? என்றெல்லாம் திரும்பத் திரும்ப அக்கறை எடுத்துக்கொண்டு யோசித்தாள், கூட்டத்துக்கு வருகிற மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் 'இம்ப்ரெஸ்' செய்ய வேண்டுமே என்பது தான் இப்போது அவள் கவவையாக இருந்தது. ஏற்கெனவே அவளுடைய படத்துடன் மூலைக்கு மூலை ஆளுயரச் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரம் செய்துவிட்டார்கள். நன்றாகப் பிரசாரமும் செய்யப்பட்டிருந்தது.

ஊர் முழுவதும் ஒரே பேச்சு, அநுக்கிரகா ம, மு. க. மேடையில் ம, மு, க. உறுப்பினராகிப் பேசும் கன்னிப் பேச்சே அதுதான், "அநுக்கிரகா ம. மு. க.விலே சேர்ந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/32&oldid=1256256" இலிருந்து மீள்விக்கப்பட்டது