பக்கம்:அநுக்கிரகா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அநுக்கிரகா

அந்த அமைதி ஒரு நாள் தான். அடுத்த நாள் மாலை தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்ததனால் பத்திரிகை அலுவலகங்கள், ஸ்டால்கள், வானொலிப் பெட்டிகள் முன்பு கூட்டம் மொய்த்தது.

விடிய விடிய வானொலி, டெலிவிஷன் முன் மக்கள் காத்துக் கிடக்க ஆரம்பித்தனர்.

முத்தையாவைப் பொன்னுரங்கம் எச்சரித்தான்.

"நாம. ஜாக்கிரதையாக இருக்கணும்! தோற்கிறதை விட ஜெயிக்கிறதிலே அதிக ஆபத்து இருக்கு, அடிபட்ட பாம்பு கொத்த வர்ற மாதிரிப் படமெடுத்துப் பாயற சுபாவம் கனிவண்ணன் பயலுக்கு. அதனாலே ஜெயிக்கிற கனிவண்ணனை விடத் தோற்கிற கனிவண்ணன் அபாயமானவன் கிறதை மறந்துடாதீங்க.

"என்ன பண்ணிடுவான்? தலையையா சீவிட முடியும்?"

"எதுக்கும் நம்ம ஆளுங்க நூறு பேரை இன்னிக்கி இங்கேயே தங்கச் சொல்லி, முன் ஜாக்கிரதையா ஒழுங்கு பண்ணியிருக்கேன்! தோட்டத்திலேயும், வரண்டாவிலேயுமா மறைஞ்சு படுத்திருக்காங்க. கிளப்பிவிட்டு அனுப்பி டாதீங்க. தனியா நாம் சமாளிக்க முடியாது.

"ரிஸல்ட் எப்பத் தெரியும்?

"அநேகமாகப் பத்து பதினொரு மணிக்குள்ளே நம்ம தொகுதி ரிஸல்ட் . வந்துடும். ஆனா அவன் உடனே . 'டெக்ளேர்' பண்ண ஒத்துக்க மாட்டான். தோத்தா ரீகவுண்ட் கேட்டு உயிரை வாங்குவான்,

"ரீகவுண்ட் கேட்டால் பணம் கட்டணுமே?".

"கட்டணும். கட்டுவான், ரீ கவுண்ட் ஆகிற டயத்துக், . குள்ள வெளியிலே தன் அடியாளுங்களுக்கு சிக்னல் அனுப்பிடுவான். இங்கே அடி உதை சோடாப் புட்டி வீச்சு கல் லெறின்னு கிளம்பிடுவாங்க...'

"எப்பிடிச் சொல்றே ?

"பதினைஞ்சு வருஷமா ஒரே கட்சியிலே பழகியிருக்கமே; கனிவண்ணன் என்ன பண்ணுவான்னு எனக்குத் . தெரியாம வேற யாருக்குங்க தெரியும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/96&oldid=1259188" இலிருந்து மீள்விக்கப்பட்டது