பக்கம்:அநுக்கிரகா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

95

"அவனே ஜெயிச்சுட்டான்னு ஒரு பேச்சுக்கு வச்சுப் போம். அப்ப என்ன நடக்கும்?

"கழுத்திலே மாலை போட்டுக்கிட்டு, அடியாளுங்க புடை சூழ ஜீப்ல அர்த்த ராத்திரியிலே, ஊர்கோலம் விடுவான். சாராயக் கடைக்கும் பிரியாணிக் கடைக்கும் பணம் செலவழியும். ஆனா இந்தவாட்டி அவன் ஜெயிக்க முடியாது. நான் சேலன்ஜ் பண்றேங்க.

எதை வச்சு அத்தினி உறுதியாச் சொல்றே பொன்னுரங்கம்?

"ஜனங்க நாடித் துடிப்பு எனக்குத் தெரியுமுங்க, இதே ஊர்ல, இதே பேட்டையிலே எத்தினி எலெக்ஷன் பாத்திருக்கேன்?

"சரி, நம்ம அநு ஜெயிச்சு, அது பொறுக்காம சோடாப்புட்டி வீச்சு, கல்லெறின்னு கனிவண்ணன் இறங்குவான்னா, நாம இப்பவே போலீஸ்ல . ஒரு பாதுகாப்புக் கேட்க வேணாமா?

'கேளுங்க. ஆனா எலெக்ஷன் ரிஸல்ட் நேரத்திலே அவங்க இப்பிடி அப்பிடிச் சாயாம் இருப்பாங்க. ரொம்பக் கண்டுக்க மாட்டாங்க. அவசியமும் இல்லே. நம்ம ஏற்பாடே பக்காவாச் செய்திருக்கேனுங்க.. வாங்க காமிக் கிறேன்." -

பொன்னுரங்கத்தைப் பின் தொடர்ந்தார் முத்தையா.. கூட்டத்தின் ஒரு பகுதியில், சோடாப் புட்டிகள், கல் குவியல்களோடு ஆட்கள் தயாராயிருந்தனர். இன்னொரு மரத்தினடியில் சிலம்புக் கழிகள், சவுக்குக் கட்டைகள் ; சைக்கிள் செயின்களுடன் ஆட்கள்.

என்னப்பா இது? என் ' வீட்டிலே எனக்குத் தெரியாம இத்தினி பாதுகாப்பு ஏற்பாடு செய்து வச்சிருக்கே?"

"பாம்பின் கால் பாம்பறியும்னு பழமொழிங்க, தோத்த விரக்தியிலேயும் கசப்பிலேயும் அந்தப் பயல் புயலாக் : கிளம்பிடுவான். பார்த்துக்கிட்டே இருங்க; ரிஸல்ட் டிக்ளேர் ஆனதும் தெரியும்,"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/97&oldid=1259193" இலிருந்து மீள்விக்கப்பட்டது