பக்கம்:அநுக்கிரகா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அநுக்கிரகா

இப்படிப் பொன்னுரங்கம் அவரிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, இரவு மணி ஒன்பதரை இருக்கும், பத்தேகால் மணி சுமாருக்கு அவரும் பொன்னுரங்கமும் முன் ஹாலில் டி.வி. எதிரே அமர்ந்து ஸ்பெஷல் புலட்டீன் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது : விர் விர்ரென்று சரமாரியாகக் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. பதிலுக்கு உள்ளே இருந்தும் தாக்குதல்களை ஆரம்பித்தார்கள். சோடா புட்டிகள் உள்ளே வந்து வெடித்து உடையும் சத்தம் கர்ண கடூரமாயிருந்தது.

"தோத்துட்டான், அதான் இதெல்லாம். நம்ப அநு அம்மா ஜெயிச்சுட்டாங்க. இப்ப. டி.வி.யில வரும் பாருங்க.."

|

பொன்னுரங்கம் சொல்லி முடிக்குமுன், தொவைக் காட்சி அறிவிப்பில் அவர்களது அந்தத் தொகுதியின் பெயரைக் குறிப்பிட்டு, 'சற்று முன் கிடைத்த தகவலின்படி, அநுக்கிரகா — கனிவண்ணனை விடப் பதினாலாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முந்திக் கொண்டிருக்கிறார்' — என்று டி.வி. அறிவிப்பாளர் அறிவிக்கவும் சரியாயிருந்தது.

"எப்படீப்பா இத்தனை சரியாக் கணிச்சுச் சொன்னே? ஆச்சரியமா இருக்கே? .. என்று முத்தையா வயதையும் மீறிச் சிறு குழந்தை போல் உற்சாகத்தில் துள்ளினார்.

"அடுத்த புலட்டீன்ல வெற்றிச் செய்தியே வந்துடும், பாருங்க, கொஞ்சம் இங்கேயே இருங்க. நான் தோட்டத் திலே போயி ஆளுங்களைப் பார்த்துப் பதில் தாக்குதலுக்கு இன்ஸ்ட க்ஷன்லாம் குடுத்துட்டு வரேன், என்று புறப்பட்டுப் போனான் பொன்னுரங்கம்.

தோட்டத்திலிருந்து, டாய்! ராங் ' பண்ணாதே தொலைச்சிடுவோம் தொலைச்சு என்று யாரையோ பதிலுக்கு மிரட்டும் குரல்கள் அவருக்குக் கேட்டன, வோட்டு எண்ணும் இடத்திலிருந்து, அநு எப்படி வீடு திரும்பப் போகிறாள் என்ற கவலையும், பயமும் இப்போது அவரைப் பிடித்துக் கொண்டன. ரௌடிகளும், முட்டாள்களும் நிறைந்த சூழலில், அரசியல் தோல்விகளை விட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/98&oldid=1259197" இலிருந்து மீள்விக்கப்பட்டது