பக்கம்:அந்தமான் கைதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

 கணபதி : ஆமா...! என்ன சொல்றேள். சித்தே புரியும் படியாத்தான் சொல்லுங்களேன்.

ஜம்பு : வேறே ஒண்னுமில்லையா. இனிமேல் எஜமானியம்மா தயவை சம்பாதித்துக் கொண்டால்தான் நாமெல்லாம் காலம் தள்ளமுடியும்; இல்லையோ, ஆபத்துதான்.

கணபதி : எஜமானியம்மா தயவைச் சம்பாதிக்கிறதா! பேஷ் உயிர் பொழச்சா போதும்.

ஜம்பு : ஏய்யா!

கணபதி : எஜமானியம்மா தயவைச் சம்பாதிக்க மொதல்லே பூசாரியோட தயவு வேணும்.

ஜம்பு : என்னையா விஷயம்?

கணபதி : விஷயமா! ராத்திரி படுக்கையறைக்குள்ளே போன எஜமான், பொழச்சது புனர் ஜென்மங்தான். போகச்சே அவர் போன ஜோரும்...அப்பா, அலறி அடிச்சிண்டு வந்தார் பாரும், ஏம்பாடு வெல வெலத்துப்போச்சு.

ஜம்பு : என்னையா சமாச்சாரம்?

கணபதி : சமாச்சாரமா புது எஜமானியம்மாளை, செத்துப் போன பழைய எஜமானியம்மா பிடிச்சிருக்காளாம், பேய்.....!

ஜம்பு : பேயா.....!

கணபதி : ஆமா பேய்தான். பிசாசுன்னும் சொல்லலாம். பூசாரி முனியாண்டியோடதான் வீட்டுக்குள்ளே அடி யெடுத்து வைக்கனும், போங்க. எஜமான் உங்களெ ரொம்ப எதிர்பார்க்கிறார். நான் முனியாண்டியை அழைச்சிண்டு வந்திடுறேன்.

(ஓடுகிறான்).
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/102&oldid=1073458" இலிருந்து மீள்விக்கப்பட்டது