பக்கம்:அந்தமான் கைதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

காப்பாற்றி வந்த திவான் பகதூரையும் கொன்று விட்டுச் சுகமடைய நினைக்கும் நீ ஒரு மனிதனா? நீ விரும்புவது காதலா? இல்லை! இல்லை! நீ கற்பனைக்கும் எட்டாத ஒரு அரக்கன்; காமவெறி பிடித்த மிருகம். பைசாச வெறிகொண்ட ஒரு காமப் பிசாசுதான் நீ ஆம்; இத்தனை அநியாயங்களையும் செய்த உனக்கு எதுதான் இனிக் கடினம் இல்லை? நீ எதையும் செய்வாய், அட சண்டாளா! நரம்பும், தோலும், எலும்பும், தசையும், மலமும், மூத்திரமும் நிறைந்த இந்த நாற்ற சரீரத்திற்குத் தானே இத்தனை அநியாயங்களும் செய்தாய்? இதோ எடுத்துக்கொள், எடுத்துக்கொள், நானே கொடுக்கிறேன். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். ஆனால் என் ஹிருதயத்தை, நான் வேறொருவருக்கு அளித்துவிட்ட என் உள்ளத்தை என் இன்ப நாயகன் இடைவிடாது இருக்கும் இதயத்தை (ஆவேசம் வந்தவளைப் போல் நெஞ்சில் திடீர் திடீரென்று பலங்கொண்டவரை தாக்கிக்கொள்ளுகிறாள். ஜம்பு நடுங்குகிறான்.) நீ கவர்ந்து விட முடியாதே? (அடியற்ற மரம்போல் மூர்ச்சையோடு கீழே சாய்கிறாள்.)

ஜம்பு : லீலா! லீலா! தெரியாத்தனம், மோக வெறி, என்னை மன்னித்து விடு; என்னை மன்னித்து விடு. நான் இனி உன் சகோதரன், சத்தியமாக நான் இனி உன் சகோதரன். லீலா!, லீலா! (லீலா கீழே விழுவதற்கு முன், ஜம்பு தன் கைகளில் தாங்கிப் பக்கத்தில் உள்ள கல்லின் மேல் கிடத்துகிறான். இச் சமயம் அத் தோட்டத்திற்கு அப்புறம் ரோட்டில் போய்க்கொணடிருந்த பாலு, ‘லீலா லீலா’ என்ற ஜம்புவின் சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் தோட்டப் பக்கம் எட்டிப் பார்க்கிறான். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/122&oldid=1072780" இலிருந்து மீள்விக்கப்பட்டது