பக்கம்:அந்தமான் கைதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

எங்கள் குடும்பமும் செல்வபோகத்தில் திகழ்ந்தது. இன்னிலையில் எங்கள் கப்பல் ஒன்று புயலில் சிக்கிக் கவிழ்ந்தது. கோடிக்கணக்கான ரூபாய் இதில் நஷ்டம்; வியாபாரம் நொடித்தது. நஷ்டத்தை ஈடு செய்ய எங்கள் நில புலன்களெல்லாம் விற்றுக் கொடுக்க வேண்டியதாயிற்று. கெளரவத்தோடும் நாணயத்தோடும் வாழ்ந்த என் தந்தைக்கு இச்சம்பவம் பெரும் மனச் சோர்வை உண்டாக்கியது. மனேவியாதியின் காரணமாகவே அவரும் இம் மண்ணுலக வாழ்வை நீத்தார். பலரும் மதிக்க, செல்வத்தில் திகழ்ந்த எங்கள்ம் குடும்பம், அதே ஊரில் சிறுமையிலும் வறுமையிலும் சில நாள் அல்லலுற்றது.

கிழக் கைதி : உம், அப்புறம்............”

வாலிபக் கைதி: எனக்கோர் தாய் மாமன் இருந்தான். அவன் பணக்காரன்; வறுமையையும் தனிமையையும் நீக்கிக் கொள்ள நினைத்த என் தாய், தன் அண்ணன் பொன்னம்பலம் பிள்ளை இருக்கும் ஊராகிய ஷண்முகநாத புரத்துக்கு, எஞ்சிய சில பொருள்களோடு எங்களையும் அழைத்துக் கொண்டு போனாள். நாங்கள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் எங்களிடத்தில் அன்பும் மதிப்பும் காட்டிய அதே திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை, அன்று எங்களைப் புறக்கணித்தார். எங்கள் ஏழ்மையைக் கண்டு ஏளனம் செய்தார். வேறு வழியில்லாத என் தாய் எஞ்சிய பொருளில் ஒரு சிறு வீட்டை வாங்கிக்கொண்டு எளிய வாழ்க்கை நடத்த ஆரம்பித்தாள். நானும் என் தங்கையும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தோம். இருந்த பொருள்யாவும் தீர்ந்துவிடவே பள்ளிப்படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உத்தியோக வேட்டையில் இறங்கினேன். அலையாத இடம் இல்லை. கேட்காத ஆபீஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/13&oldid=1024301" இலிருந்து மீள்விக்கப்பட்டது