பக்கம்:அந்தமான் கைதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


சேர்வை : ஆமாங்க.

பொன் : சரி அப்படி உட்காரு.

(சேர்வை நிற்கிறான்)

முனி: அட சும்மா உட்காரய்யா! எஜமான் அப்படியெல்லாம் ஒன்றும் வித்தியாசமா நினைக்கமாட்டாரு.

(சேர்வை உட்காருகிறான்)

பொன்: ஊம்...நீர்தான் என் மைத்துனர் நாராயணசாமி பிள்ளை வீட்டின் பேரில் பணம் கொடுத்திருக்கிறீரோ?

சேர்வை : ஆமாங்க.

பொன்: எவ்வளவு?

சேர்வை: ஆயிரத்தி ஐநூறு ரூபாயிங்க ஆறு வருஷம் ஆச்சுங்க, ஒன்று வட்டி போட்டுப் பத்திரம் எழுதினது. இப்பக் கிட்டத்தட்ட மூணு ரூபாய்க்கு மேலே ஆவுமுங்க.

பொன்: நீ ஏன் அந்தப் பணத்தை இன்னும் வசூல் பண்ணாமல் இருக்கிறாய்?

சேர்வை: என்ன பண்றதுங்க நல்லா வாழ்ந்த குடும்பம், நொடிச்சுப்போச்சு. அந்தப் புண்ணியவான் இருந்த காலத்திலே எனக்கு எவ்வளவோ ஒதவி செய்திருக்காருங்க. இப்போ ஊட்டே ஏலத்துக்குக் கொண்டாந்தாத்தான் பணம் வரும்போல இருக்கு, பாவம்! அந்த வீடும் போயிட்டா அவரு சம்சாரம் புள்ளே குட்டிங்க எல்லாம் எங்கே போவுமுன்னுதான் யோசிக்கிறேன்.

முனி: அட போய்யா போ. அதெல்லாம் பாத்தா இந்தக் காலத்திலே எப்படியய்யா பிழைக்க முடியும்? இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/50&oldid=1029119" இலிருந்து மீள்விக்கப்பட்டது