பக்கம்:அந்தமான் கைதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

 வேலை ஆள் : சாக்ஷாத் இருபது வயது வாலிபன் மாதிரி இருக்குங்க!

பொன் : மடையன்! என்னைப் பார்த்துக் கிழவனென்று சொன்னான்.

வேலையாள் : என்ன, ஒங்களெப்பாத்தா அப்படிச் சொன்னான்? அவன் யாருங்க பயித்தியக்காரன்?

பொன் : அவன் தாண்டா. அந்தக் காலிப்பயல் நடராஜன் (தனிமொழி) அடே நடராஜா! நான் யார் என்பது இன்னும் கொஞ்ச நாழியில் தெரியும். இன்று உன் தங்கை திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளையின் மனைவி ஆகப்போகிறாள். இப்போது உன் சபதம் என்ன ஆயிற்று? அயோக்ய நாயே! (அங்கவஸ்திரத்தை அலட்சியமாய் தாக்கிப் போட்டபடி ராஜநடை நடந்து செல்லுகிறார்.)



காட்சி 21.

இடம் : நடராஜன் வீடு.

காலம் : காலை

பாத்திரங்கள் : காமாட்சி, லீலா.

[ஆடைகள் ஆபரணங்கள் எல்லாம் அலங்கோலமாய்க் கிடக்கின்றன. லீலா அழுத வண்ணமிருக்கிறாள். காமாட்சி கையில் கலியாணப் புடவை நகைகளை வைத்துக் கொண்டு நிற்கிறாள்.]

காமா : ஏண்டி! நான் சொல்றது காதிலே கேக்கலையா? காரு வந்து ஒருமணி நேரமாக் காத்துக்கிட்டு இருக்கு. முகூர்த்த நேரம் நெருங்கிப் போச்சி. வந்த மனுசா ளெல்லாம் காத்துக்கிட்டு இருக்காங்க இன்னு, நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/92&oldid=1073453" இலிருந்து மீள்விக்கப்பட்டது