பக்கம்:அந்தமான் கைதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அப்பவேபுடிச்சி சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்குக் கல்லுப்பிள்ளையாரு மாதிரி உக்காந்துக் கிட்டு அசையமாட்டேங்கிறியே! இது தேவலாமா?

லீலா : நீ என்னை, என்னதான் அம்மா செய்யச் சொல்லுகிறாய்? நீ என்ன சொன்னாலும் சரி; நான் கண்டிப்பாய் வர முடியாது.

காமா : என் கண்ணுல்லே. நீ, அப்படியெல்லாஞ் சொல்லலாமா? பொண்ணழைக்க வந்தவங்க எல்லாம் எவ்வளவு நாழியா வெளியே காத்துக்கிட்டு இருக்காங்க. நீ இப்படி மொரண்டு பண்ணின அவுங்கள்ளாம் என்ன நெனப்பாங்க? ஆனது ஆயிப் போச்சி. இன்னமே அதெல்லாம் நெனைக்கலாமா? நான் சொல்றதக் கேளம்மா? உம், இந்தா இதெல்லாம் போட்டுக்கொண்டு சீக்கிரமா......

[என்று சொல்லிக்கொண்டே நகையைக் கழுத்தில் போடப் போகிறாள். லீலா உதறித் தள்ளிவிடுகிறாள்.]

லீலா : இந்தா அலங்கார மெல்லாம் வேண்டா மென்றால் விட்டு விடேன். என்னை ஏன் இப்படி இம்சிக்கிறாய்?

காமா : நானா இம்சிக்கிறேன். ஏண்டி! நகை போட்டுக்கிறதும் பொடவை கட்டிக்கிறதுமா உனக்கு, இம்சையாயிருக்கு?

லீலா : உனக்கு இம்சை இல்லை; எனக்கு இம்சையாய் இருக்கிறது. இதைவிட நான் இறந்து விடுவதே மேல்,

காமா : கல்யாணத்துக்குப் பயந்து உயிரை விட்டவ ஒலகத்திலே ரொம்பப்பேருடி யம்மா ரொம்பப்பேரு! அடியே வேண்டாம். ஊருலே நாலு பேருக்கு, மதிப்பா பெரிய மனுஷென்னு இருக்கிற அவெம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/93&oldid=1071992" இலிருந்து மீள்விக்கப்பட்டது