பக்கம்:அந்தமான் கைதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

பேரு வீணாக் கெட்டுப் போயிடும். எல்லா ஏற்பாடும் ஆனதுக்கு அப்பறம் இந்தக் கல்யாணம் நின்னு போனா! அது நமக்குங் கேவலம். நம்ம சாதியிலே ஒரு தரம் ஒரு மாப்பிள்ளைக்கு நிச்சயமான பொண்ணெ வேறே ஒருத்தரும் எடுக்கவும் மாட்டாங்க, இதெல்லாம் யோசனெ பண்ணாமே நீ பாட்டுக்கு சின்னப் புள்ளேத்தனமா.......

லீலா : யாருடைய கேவலத்தைப் பற்றியும் எனக்குக் கவலை யில்லை! இந்தச் சம்மந்தத்தையோ அல்லது இன்னொரு சம்மந்தத்தையோ நான் விரும்பவுமில்லை. இதைவிட நான் கன்னியாகவே இருப்பது போதும் உனக்குக் கோடி புண்ணியம் உண்டு, என்னை வீணாகத் தொந்தரவு செய்யாதே.

காமா : ஊஹூம், அவ்வளவு தூரம் ஆயிடுச்சா! ஒன்னெச் சொல்லக் குத்தமில்லேடி, ஒன்னெச் சொல்லக் குத்தமில்லே. ஒன்னெ இந்த-இந்த-இந்த (வயிற்றில் அடித்துக் கொள்ளுகிறாள்) வயிற்றில் பத்து மாசம் செமந்து பெத்தேன்பாரு, அதுக்குப் பலன் இது. இதை அவன் கேட்டா இந்த ஊரிலேயே குடி வைக்க மாட்டான். தொலைச்சேப்புடுவான்; இந்த மானக்கேட்டைப் பொறுத்துக்கிட்டு என் உயிரை வச்சிக்கிட்டு அரநாளிகூட இருக்கமாட்டேன். ஒன் இஷ்டப்படி செய். இந்தா ஒரு நிமிஷத்திலே என் உயிரெ மடிச்சிக்கிறேன்.

(கையிலிருந்த எல்லாவற்றையும் வீசியெறிந்து விட்டுக் கொல்லப்புறம் ஒடிக் கேணியில் குதிக்க முயற்சிக்கிருள்; லீலா பீதியடைகிறாள்.)

லீலா : ஐயோ! அம்மா, வேண்டாம் வேண்டாம்....... (கத்திக் கொண்டே பின் தொடர்ந்து போய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/94&oldid=1072011" இலிருந்து மீள்விக்கப்பட்டது