பக்கம்:அந்தித் தாமரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f45

வழியில் அங்காளம்மை சக்கிதியில் தெரிந்த ஒரு காட்சி, அவனுடைய கழுத்தை இறுக்கும் பிடிகயிருக உருமாறிற்று. - -

ஊராளும் தெய்வத்தை முன்வைத்து, தில்லைக் கண்ணே மணமகளாக அடைவதற்கான பரிசம்’ நிகழ்ச்சி மணமகன் சார்பில் கடை பெற்று முடிந்தது.

முத்தரசன் சித்தம் குழம்பின்ை. தில்லைக்கண்ணு. இம்மாங் தொலைவு என்னை வசமா ஏமாத்திப் புட்டாளே?... அரசர் குளம் மாப்பிள்ளையாமில்ல இந்த ஆம்டளே? பேரைப்பாரு பேரை!... சிலம்பணுமே?... ஆளு சொகுசிலே மவளும், ஆளோட பணப்பசையிலே ஆத்தாளும் பித்துப் புடிச்சுப் போயிட்டாக போல:

பரிசத்துக்கு எடுத்து வந்திருந்த நாவல்பழ நிறப் புடவையில் அவன் கண்ணிர் சொரிந்தான். -

எருக்கலைக் கோட்டை அவனுக்கு அசல் நாடானது. கிறுக்குப்பிடித்த போக்கில் கடந்தான். காரைமுள் காட்டினுடே பாதம் பதித்தான். பேய்க்கிணறு ஒன்று தென்பட்டது. அந்தியின் ரத்தச்சிவப்பு அவனது விரக்திக்கு வெறியூட்டியது. து!...தில்லைக்கண்ணும் தில்லைக்கண்ணு’ என்று பற்களைக் கடித்தான். அவள் அவனுடைய வெஞ்சினப் பற்களுக்குள் அகப்பட்டு விடுவாளா அவ்வளவு லேசில்-லகுவில் ? சுற்றிச் சூழ நோக்கினன். கருக்கலிலிருந்து கடந்து, கடைமெலிந்து உதடுலர்ந்து உள்ளம் கொந்து போயிருந்தான். தாகம் మౌశిణా மீட்டியது. கண்களைச் சுழலவிட்டான். எங்கெங்கு நோக்கினும் தில்லைக்கண்தான் அழகு கடம் பயின்றாள்; ஆனந்தக் கூத்து ஆடினுள் தில்லைக் கண்ணு’ என்று ஒலம் பறித்தான். தில்லைக்கண். இல்லாத வாழ்வு கசந்தது. நீர் வழிகேட்ட விழிகளுடன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/147&oldid=619616" இலிருந்து மீள்விக்கப்பட்டது