பக்கம்:அந்தித் தாமரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


தைந்நூறு ரூபாய் பிராமிசரி கோட்டை உன்னேட அண்ணன் சின்னையா மேடோவர் வாங்கியிருக்கிறது நூத்துக்கு நூறு கெசந்தான். வருகிற விதி இராத் தங்காதின்னு பேச்சுக்கு சொல்லுவாங்க. வார கிழமை கச்சேரி திறக்கப் போருங்களாம்! ...கம்ப கையிலே என்ன இருக்கு.? நீ மனசை அலைமோத விடாதே, பொன்னம்மா!’ என்று தேறுதல் உரைத்தான் பிரமன்.

வெள்ளைப்பூண்டுக் குழம்பு என்றல் பிரமனுக்கு மிகவும் பிடித்தம்; கணவனின் இதயம் புரிந்த அவள் அவனுடைய ருசியையும் அறிந்திருந்ததால்தான் அப் படி அன்றைக்குக் குழம்பு வைத்திருந்தாள். பருப்புத் துகையல் வேறு தயாரித்திருந்தாள் பொன்னம்மா. ஆனல், வட்டிலின் முன் அமர்ந்த அவனே சூன்ய வெளியிலே கண் பதித் திருந்தானே யொழிய சோற்றுத் திரளில் மனம் செலுத்தவில்லை. முதல் உருண்டை தொண்டைக்குள் சென்று விழுந்தது; விக்கல் எடுத்தது; தண்ணீர் கொடுத்தாள் அவள். ஆனால், அவனது மனமோ கடந்த காலத்தின் திரையை விலக்கிப் பார்த்தது: -

மாங்குடி மண்ணில் எந்தப் பகுதியை எங்கேரம் தொட்டுக் கேட்டாலும், அது விடை சொல்லும் விதம் இவ்வாறுதான் இருக்கும்: ‘பிரமன் ரொம்ம கல்ல ஆள்: மானத்துக்குக் கட்டுப்பட்ட புள்ளி, கஞ்சியாய்க் குடிப் பதைக் கரைத்துக் குடித்தாலும், கெளரவம் பாழ் பட ஒப்பாத மானி’ * . .

இத்தகைய குணச்சித்ர அமைப்புப் பூண்ட பிரம னுடைய வாழ்க்கையில் சோதனை புகுந்தது. நூறு குழி புன்செய் அவனுக்குப் பிதுரார்ஜித சொத்து; அதில் வேர்க்கடலை போட்டிருந்தான். எழுபது குழி கஞ்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/154&oldid=1273130" இலிருந்து மீள்விக்கப்பட்டது