பக்கம்:அந்தித் தாமரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஓ, அங்கேயா? நான்கூட அந்தப் பக்கம் வங்தி ருக்கேன். எங்க அம்மா அங்கே ஒரு பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லித் தந்தாங்க. அதுசரி, உங்க பெண் சாதி அங்கேதானே இருக்காங்க? வரப்போ அவங்களே யும் கூட்டிவரக் கூடாது?... அம்மாவுக்கும் பழக்க மாகுமே...? ஊஹூம், இப்போ கூட்டிவராதது நல்ல தாப் போச்சு. நான் உங்க முகத்திலே சீசாவை வீசின தைக் கண்டா அவங்க எவ்வளவு ஆத்திரப்படுவாங்க எம்பேரிலே. இன்னொரு நாளைக்கு அவங்களைக் கூட்டி வர நானே வர்றேன். உங்களுக்கு என் மாதிரி பாப்பா இருக்குதா?"...

 “பாப்பா என் மனைவிக்கு உடம்பு சரியில்லை. பட்டணத்திலே அவங்க பிறந்த வீட்டிலே இருக்கிறாள். உன் மாதிரி பாப்பாவை எனக்குக் கடவுள் இன்னும் கொடுக்கவில்லை, சூடா பகவானுக்கு என்னிக்குத்தான் மனசு இரங்கி உன் போல ஒரு கெட்டிக்கார மகளை எனக்குத் தருவாரோ?...’
 “நிச்சயம் உங்களுக்கு என் போலவே ஒரு பெண் பிறக்கும், ஸார். நல்லவங்களைச் சோதிக்கிறதிலே ஆண்டவனுக்கு ஒரு சந்தோஷமாமே-சோதனையிலே வெற்றி அடைஞ்சிட்டா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது செய்வாராமே-அம்மா சொல்லுவாங்க அடிக் கடி."
  தண்டபாணிக்கு வாய் விட்டுச் சிரிக்க மட்டுந்தான் தெரிந்தது-சூடாமணியின் முன்னிலையில். 
  குழந்தை கடவுளின் மறுபதிப்பு என்கிறார்களே...!
  அன்று பள்ளிக்கூடத்து விழாவில் கடனமாடிய உடையுடன் தோன்றினாள் சூடா. கலங்கிக்கிடந்த
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/21&oldid=1387180" இலிருந்து மீள்விக்கப்பட்டது