பக்கம்:அந்தித் தாமரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கிடந்தன. ‘கற்பகத்துக்குச் சுயநினைவு வந்திருக்குமல்லவா?...நான் காலையில் ஆபீஸ் வருமுன் டாக்டரை அழைத்து வந்து காட்டியபோது, அவள் தன்நினேவு தப்பிக் கிடந்தாளே?...ஜூரம் நூற்று நாலு டிகிரி இருந்ததே!... கடவுளே !’

கைமாற்று வாங்கி, வைத்தியச் செலவுகளை நடத்தி வந்த கதையை அவன் நினைக்கவில்ல்லை; ஆனாலும், சம்பவங்கள் சட்டை உறித்த பாம்புக்குட்டிகளக நெளிந்தன.

மனம் ஒரு பாம்புப் புற்று!

ஓர் அழைப்பு வநதது. டாக்டர் மோஹனசுந்தரம் கூப்பிட்டார். நாமதேவனிடம், “உங்கள் மனைவிக்கு இனிமேல் பயமில்லை. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜெர்மன் இஞ்செக்ஷன் ஒன்றைப் போட்டிருக்கிறேன். சாயந்திரம் வரும்போது பணத்துடன் வாருங்கள். நூறு ரூபாயாவது ஆகும். சில புதிய மருந்துகளும் வாங்க வேண்டும். கர்ப்ப ஸ்திரியானதால், இப்போது சர்வஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்; மறந்து விடாதீர்கள்!” என்று எச்சரிக்கை செய்தார்.

கைமாற்றுப் பாக்கிக்கு வழி என்ன செய்வது என்று குழம்பிக் கிடந்த அவனுக்கு மேலும் குழப்பம் மலிந்தது. கெட்ட காலத்தில் நல்ல காலம் போன்று, அன்று மாலை சீட்டு ஏலம் என்று அவனுடைய அலுவலகத் தோழர் செய்தி தெரிவித்தார். அவனுக்குச் சக்தோஷம் சூடு பிடித்தது; இருநூற்றைம்பது ரூபாய்ச் சீட்டை எழுபத்து ஐந்து தள்ளி, நூற்றியெழுபத்தைக்துக்கு எடுத்தான் நாமதேவன். ஐந்தாறு காப்பி செலவழிந்ததைப் பற்றிப் பொருட்படுத்தாத பண்பு கொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/32&oldid=1320971" இலிருந்து மீள்விக்கப்பட்டது