பக்கம்:அந்தித் தாமரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51



காணப்பட்ட அவ்வுருவத்தின் கண்களில் படிந்துவிட்டிருந்த கண்ணீரைக் கண்டு அவள் பதைபதைத்தாள்.

“அப்பா, நீங்கள் அழுதீர்களா? நான் ஒருத்தி நாளெல்லாம் உங்கள் நிமித்தம் அழுது தீர்ப்பது பேதாதா? அப்பா, நீங்கள் இருந்து என் கல்யாணத்தை நடத்தி ஆசி வழங்க வேண்டியவர்களாயிற்றே. பெற்ற மகளைக்கூட உதறி எறிந்துவிட்டு இந்த ஒரு வருஷமாக எங்கே அப்பா போய்விட்டீர்கள்...? உங்கள் மகள் வெறும் உயிர்க்கூடாகி விட்டதை உங்களிடம் யார் வந்து சொல்லப் போகிறார்கள்? அப்பா உங்களை ஒரே ஒரு முறைகூட இந்த அபலை பார்க்கக் கொடுத்து வைக்க மாட்டேனா...? ஐயோ! அப்பா... ...! பெற்ற தந்தைகூட இல்லாமல் தாலி அணிந்து கொள்ள வேண்டுமா?...அப்பா...!” என்று அவள் பலவாறு எண்ணிப் புலம்பினாள்.

மறு முறையும் தன் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தாள்; அப்போது அவள் தந்தை சிரித்த முகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார். -

புயல் ஆட்சி செலுத்திய பெண் நெஞ்சத்தில், கடந்த காலச் சம்பவங்கள் தென்றலில் பிறந்து திரைப்படமாக விரிந்து கொண்டிருந்தன.

புதுக்கோட்டை சமஸ்தானமாக இயங்கிக் கொண்டிருந்த பொன் நாட்களில், தர்பாரில் முக்கியமானதொரு பதவி வகித்து வந்தவர் பூரணலிங்கம். எட்டுக் கண் விட்டெரியும் என்பார்களே, அப்படிப்பட்ட கியாதி பெற்ற நாட்களில்தான் பார்வதி அவதரித்தாள்; கண்ணில் வைத்து இமையால் மூடிப் பேணி வளர்த்தார்கள் பெற்றவர்கள். மூக்கும் முழியுமாகப் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/53&oldid=1305010" இலிருந்து மீள்விக்கப்பட்டது