பக்கம்:அந்தித் தாமரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதையோ கினேவூட்டிக் கொண்டவர் போலத் திரும்பவும் டெஸ்ட் செய்ய ஆரம்பித்தார். அவர் கண்கள் புதுஒளி காட்டின.

‘சேகர், கவலைப்படாதீர்கள். ஜயக்திக்கு இனிக் கொஞ்சமும் ஆபத்தில்லை. அவள் வயிற்றுச் சிசுவும் பிழைத்துவிடும். இப்போது போட்ட ஊசி மிகவும் சக்தி வாய்ந்தது. நல்ல சமயத்தில் நான் வந்துவிட் டேன். வயிற்றில் குழந்தையின் அமைப்பு இடம் புரண்டு விட்டிருப்பதே எல்லோரையும் பயப்படுத்தி விட்டது...’ என்று சொல்லிவிட்டு, டாக்டர் கமலத்தின்

பக்கம் திரும்பினர்.

o,

“மிஸ் கமலம், ஒரு வினுடியில் ஜயந்திக்குப் பிரசவமாகிவிடும். காங்கள் ஹாலில் இருக்கிறேம. செய்தி அனுப்புங்கள், ஜயந்தியிடம் நானே வந்திருப்ப தாகவும்கூறுங்கள் !” - -

குணசீலனும் சேகரனும் ஹாலில் போய் அமர்க் ததும், ஜயந்திக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. குணசீலன் மனம் அப்போது அடைந்த நிம்மதிக்கு எல்லேயில்லை. சற்று முன்தான் ஜயந்தியைப் பற்றிப் பழி சுமத்தியதையும், அதன் பலகைத் தன் நினைவுகள் பாம்பாகச் சீறினதையும், கடைசியில் தன் மனம் ஜயந்திக்கெனப்படாத பாடுபட்டதையும் நினைக்க நினைக்க, அவருக்கு எல்லாமே சொப்பனம் மாதிரியாகத் தோன்றின. சற்றுமுன் தன்னைப் புறப்படச் சொல்லி ஆணையிட்டு, வேண்டிக் கொண்ட தன் மனைவியின் இதயத்தை, அவள் அத்தான் இன்பம் நிலைக்கச் சிபாரிசு சொல்லி விடுத்த அவளது விண்ணப்பத்தை எண்ணி வியந்தார். அவர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/70&oldid=620103" இலிருந்து மீள்விக்கப்பட்டது